ஆராதனா என்னும் இசைக்கல்லூரியைக் கொழும்பில் நடாத்தி வரும் V.K.J மதி அவர்களின் " Heart Beats " என்ற இசை ஆல்பம் கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி , வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையில் உள்ள கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் வெளியிடப்பட்டது இந்த இசைத்தொகுப்பை அவரே எழுதி இசையமைத்திருக்கின்றார். பாடல் அமைப்பு மற்றும் தயாரிப்பு என்பவற்றையும் அவரே கவனித்துள்ளார்
இந்த இறுவட்டிலுள்ள பாடல்களை
Heart Beats இசை ஆல்பம்
Posted by மாயா at 3 comments
Labels: வெளியீடுகள்
ஆறுமுக நாவலர்
தமிழ் உரைநடையின் முன்னோடி, தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்த ஆறுமுக நாவலர் (டிசம்பர் 18 ,1822 - டிசம்பர் 5 ,1879 ) மறைந்த நாள் இன்றாகும் .அவர் பற்றி ஈழத்தவர்களுக்கு சொல்லி தெரிவதற்கு ஒன்றுமில்லை ஏனைய வலையுலக நண்பர்களுக்காக இதோ சில தகவல்களை விக்கிபீடியா உதவியுடன் தருகிறேன் . ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், நல்லூரிலே 1822 டிசம்பர் 18 இல் புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் கந்தப்பிள்ளை - சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகவாகப் பிறந்தார் இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை.நாவலருக்கு நான்கு மூத்த சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் அக்காலத்திலிருந்த முன்னணி ஆங்கிலப் பாடசாலையான மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையில் (இக்காலத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) கற்று ஆங்கிலத்திலும் திறமை பெற்றார். அவரது இருபதாவது வயதில் அப்பாடசாலையில் ஆசிரியராகப் பணியேற்ற நாவலர், அப்பாடசாலையின் நிறுவனராயும், அதிபராயுமிருந்த பேர்சிவல் பாதிரியார் கிறிஸ்தவ வேதாகமத்தைத் தமிழில் மொழி பெயர்க்கும் வேலைக்கு உதவியாக இருந்து பணியாற்றினார். பேர்சிவல் பாதிரியருடன் சென்னப்பட்டணம் சென்று அச்சிடுவித்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பினார்.
சைவத் தமிழ்ப் பண்பாட்டுக்கு இசைவான கல்வி, சைவசமய வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி ஆகிய நோக்கங்களுக்காகப் பணிபுரியத் தொடங்கினார் நாவலர். சைவ சமயம் வளரும் பொருட்டு பிரசங்கம் செய்வதெனத் தீர்மானித்தார். இவரது முதற் பிரசங்கம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் டிசம்பர் 31, 1847 ஆம் நாள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் பிரசங்கம் செய்தார். இப்பிரசங்கங்களின் விளைவாகப் பெரும் சமய விழிப்புணர்வு ஏற்பட்டது.
வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் ஒரு சைவப் பாடசாலையை ஆரம்பித்தார். சமய வளர்ச்சிக்குத் தமது முழு நேரத்தையும் செலவிடத் தீர்மானித்து செப்டம்பர் 1848 இல் தமது மத்திய கல்லூரி 3 பவுண் மாதச் சம்பள ஆசிரியப் பணியைத் துறந்தார். சைவப்பிள்ளைகளுக்குப் பாடநூல்கள் அச்சிடுவதற்கு அச்சியந்திரம் வாங்குவதற்காக நல்லூர் சதாசிவம்பிள்ளையுடன் 1949 ஆடி மாதம் சென்னைக்கு சென்றார். அங்கு திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப்பிரசங்கம் செய்து தமது புலமையை வெளிப்படுத்தி நாவலர் பட்டத்தைப் பெற்றார். சென்னையில் சிலகாலமிருந்து சூடாமணி நிகண்டுரையும் சௌந்தரியலங்கரி உரையும் அச்சிற் பதித்தபின் ஓர் அச்சியந்திரத்துடன் யாழ்ப்பாணம் திரும்பினார்.
தமது இல்லத்தில் வித்தியானுபாலனயந்திரசாலை என்னும் பெயரில் ஓர் அச்சுக்கூடம் நிறுவி பல நூல்களை அச்சிட்டார்
சில நூல்களின் விபரம்
* பாலபாடம்
* ஆத்திசூடி
* கொன்றைவேந்தன் உரை
* சிவாலயதரிசனவிதி
* சைவசமயசாரம்
* கொலை மறுத்தல்
* நன்னூல் விருத்தியுரை
* திருமுருகாற்றுப்படையுரை
[திருத்தொண்டர் பெரியபுராணத்தையும் வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களை வெளியிட்டார்.]
இவரது பணி இலங்கையில் மட்டுமன்றி தமிழ் நாட்டிலும் பரவியிருந்தது. சென்னையில் திருவாசகம், திருக்கோவையார் நூல்களை 1959 வைகாசி மாதம் வெளியிட்டார். பெரியதொரு அச்சியந்திரத்தை விலைக்கு வாங்கி சென்னை தங்கசாலைத் தெருவில் வித்தியானுபாலன இயந்திரசாலை என்ற அச்சகம் நிறுவிப் பல நூல்களையும் அச்சிட்டார். சென்னையிலும் திருவாவடுதுறை மற்றும் திருநாகைக்கோராணம் ஆகிய இடங்களில் தங்கி சைவப்பிரசங்கங்கள் செய்தபின் 1862 பங்குனியில் யாழ்ப்பாணம் திரும்பினார்.
1863 மார்கழியில் மீண்டும் தமிழகம் சென்றார். அங்கு இராமநாதபுர சமஸ்தானத்தில் பிரசங்கம் செய்தார். அங்கிருந்து மதுரை சென்று மீனாட்சியம்மை சந்நிதானத்திலே பிரசங்கித்து மீனாட்சிக்கு அணிவிக்கப்பெற்ற பரிவட்டமும் பூமாலையும் அணிவிக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார்.
குன்றக்குடியிலுள்ள திருவண்ணாமை ஆதீனத்தில் அவர் செய்த பிரசங்கத்தை மெச்சி நாவலரை பல்லக்கில் ஏற்றித் தம்பிரான்கள், ஓதுவார்கள் சூழ்ந்து வர சகல விருதுகள், மங்கல வாத்தியங்களுடன் பட்டணப் பிரவேசம் செய்வித்தார்கள். அங்கிருந்து திருப்பெருந்துறை, திருப்பள்ளிருக்குவேளூர், சீர்காழி ஆகிய தலங்களை வணங்கிச் சிதம்பரம் சேர்ந்தார். அங்கு 1864 ஐப்பசியில் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையை ஸ்தாபித்தார். 1866 மார்கழி மாதம் சென்னை திரும்பி சைவப்பிரசங்கங்கள் செய்வதிலும் நூல்கள் அச்சிட்டு வெளியிடுவதிலும் நாவலர் ஈடுபட்டார். 1869 ஆனியில் சிதம்பரம் சென்றார். அப்போது சைவாகம விடயமாகவும் சிவதீட்சை விடயமாகவும் நாவலர் தெரிவித்த சில கருத்துக்களால் மனம் பேதித்திருந்த சில தீட்சிதர்கள் வள்ளலாரைக் கொண்டு சிதம்பராலயத்தில் 1869 ஆனி உத்தரத்தன்று ஒரு கூட்டம் கூட்டினார்கள். அங்கு நாவலரைப் பலவாறாகத் தூஷித்து விட்டு நாவலர் தம்மை அடித்ததாக மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். இவ்வழக்கில் வழக்காளிகளுக்கே அபராதம் விதிக்கப்பட்டது. சிதம்பர வழக்கின் பின் நாவலர் தருமபுரி திருவிடைமருதூர் திருவேட்டக்குடி காரைக்கால் கோடிக்கரை ஆகிய தலங்களைத் தரிசித்த பின்னர் 1870 பங்குனியில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்.
1870இல் நாவலர் கோப்பாயில் ஒரு வித்தியாசாலையை ஆரம்பித்து தமது செலவில் நடத்தினார். 1871 இல் வண்ணார்பண்ணையில் ஜோன் கில்னர் என்பவர் நடத்திய வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலையில் சைவ மாணாக்கர் விபூதி அணிந்து சென்றமைக்காகப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்பிள்ளைகளின் நன்மை கருதிய நாவலர் சைவ ஆங்கிலப் பாடசாலை ஒன்றை வண்ணர்பண்ணையில் 1872 தை மாதத்தில் நிறுவி நடத்தினார். நிதி வசதி இன்மையால் இப்பாடசாலை நான்கு ஆண்டுகளே நடைபெற்றது.
1872 ஐப்பசி மாதத்தில் தாம் அதுவரை பெற்ற அனுபவத்தால் அறிந்த உண்மைகளைத் திரட்டி எழுதி அதற்கு யாழ்ப்பாணச் சமய நிலை எனப் பெயர் தந்து வெளிப்படுத்தினார். 1875க்கும் 1878க்கும் இடைப்பட்ட காலத்தில்
* நன்னூல் விருத்தியுரை
* நைடதவுரை
* திருவிளையாடற் புராணம்
* நன்னூற் காண்டிகையுரை
* சிவபூசா விதி
* மூன்றாம் அனுட்டான விதி
* குரு சிஷ்யக் கிரமம்
* பூசைக்கு இடம்பண்ணும் விதி
* சிராத்த விதி
* தருப்பண விதி
* போசன விதி
* தமிழ் அகராதி
* தமிழ்-சமஸ்கிருத அகராதி
* தமிழ்-ஆங்கில அகராதி
முதலிய நூல்களை எழுதுவதிலும் சைவப் பிரசங்கங்கள் செய்வதிலும் நாவலர் ஈடுபட்டார்.
நாவலரது கடைசிப் பிரசங்கம் 1879 ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூசைத் தினமான ஆடிச்சுவாதி அன்று வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் இடம்பெற்றது. 1879ஆம் ஆண்டு (பிரமாதி வருடம்) கார்த்திகை மாதம் 18ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நாவலரது உடல் நலம் குன்றியது. அடுத்த மூன்று தினங்களும் குளிக்க முடியாதிருந்ததால் நாவலரது நித்திய சிவபூசை வேதாரணியத்துச் சைவாசாரியர் ஒருவரால் செய்யப்பட்டது. 21ஆம் நாள் வெள்ளிக்கிழமை (05-12-1879) இரவு தேவாரம் முதலிய அருட்பாக்களை ஓதும்படிக் கட்டளையிட்டு அவைகள் ஓதப்படும்போது சிதம்பரம் காசி மதுரை திருச்செந்தூர் முதலிய புண்ணியத்தலங்களின் விபூதி அணிந்து உருத்திராட்சம் பூண்டு கங்காதீர்த்தம் உட்கொண்டு கைகளைச் சிரசின்மேற் குவித்து இரவு ஒன்பது மணியளவில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.
குருபூசைத் தினம்: கார்த்திகை மகம்
பால பாடம் முதற் புத்தகத்தை இங்கே தரவிறக்குங்கள்
நன்றி :- விக்கிபீடியா
Posted by மாயா at 0 comments
சேர் பொன்னம்பலம் இராமநாதன் நினைவு நாள்
சேர் பொன்னம்பலம் இராமநாதன் (ஏப்ரல் 16 1851 - நவம்பர் 26 1930) இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர்.
வாழ்க்கை
பொன்னம்பலம் இராமநாதன் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த இராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) அருணாசலம் பொன்னம்பலம் என்பவரின் இரண்டாவது புதல்வராக கொழும்பில் பிறந்தார். குமாரசாமி முதலியார், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோரது சகோதரர். ஆரம்பக் கல்வியை கொழும்பு இராணிக் கல்விக்கழகத்தில் கற்றார். 13 ஆவது வயதில்இ பிரெசிடென்சி கல்லூரியில் கல்வி கற்பதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டார். சேர் றிச்சட் மோர்கனின் கீழ் சட்டக் கல்வி பயின்று 1873 இலே உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார். பின்னர் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவிவகித்து 1906 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.
அரசியல்
1879 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டநிரூபண சபைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். 1921 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசினால் பிரபுப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மிகுந்த சொல்வன்மையும் வாதத் திறமையும் வாய்க்கப்பெற்ற இவர் இலங்கையில் பிரித்தானியரின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக வாதாடி இலங்கையரின் நலன்களைப் பாதுகாத்தார்.
சமூக சேவை
இவர் அரசியல் மூலம் மக்களுக்குச் செய்த தொண்டுகள் தவிர சமய, சமூகத் துறைகளிலும் சேவை செய்துள்ளார். இந்துக்களின் கல்வி மேம்பாட்டுக்காக யாழ்ப்பாணத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இரண்டு பாடசாலைகளை நிறுவியுள்ளார். இவற்றில் பெண்கள் பாடசாலையான உடுவிலில் அமைந்துள்ள இராமநாதன் பெண்கள் கல்லூரி இன்றும் யாழ்ப்பாணத்தின் முக்கிய கல்லூரிகளிலொன்றாக விளங்கிவருகிறது. ஆண்கள் பாடசாலையான பரமேஸ்வராக் கல்லூரி 1970 களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஒரு பகுதியாக்கப்பட்டது.
* கீழைத்தேய மெய்யியல் தூதுவராக 1905 - 1906 இலே அமெரிக்கா சென்று சொற்பொழிவுகளாற்றிப் பேரெடுத்தார். சைவசித்தாந்த மகாசமாஜத்தின் முதல் மாநாட்டிற்குத் (1906) தலைமை வகித்தார்.
* தந்தை கொழும்பு கொச்சிக்கடையிற் கட்டி 1857 நவம்பரிலே கும்பாபிஷேகம் செய்வித்த ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி கும்பாபிஷேகம் செய்வித்தார்.
* 1923 ஆம் ஆண்டிலே யாழ்ப்பாணத்திற் சைவ வித்தியாவிருத்திச் சங்கம் தோன்றுவதற்குக் காலாக இருந்ததோடு அதன் முதற் தலைவராகவும் பள்ளிக்கூடங்களின் முகாமையாளராகவும் 1926 வரை சேவை செய்தார். தொடர்ந்து அதன் போஷகராகவும் விளங்கினார்.
அரசியலில் இவர் நாட்டுக்குச் செய்த சேவையைக் கௌரவிப்பதற்காக கொழும்பில் பழைய நாடாளுமன்ற வளாகத்துக்குள் இவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.
நன்றி விக்கிபீடியா
Posted by மாயா at 6 comments
திரு கார்த்திகேசு சிவத்தம்பி பவளவிழா மலர் வெளியீட்டுவிழாவில்
தற்காலத் தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் மற்றும் சமூக சிந்தனையாளர் திரு கார்த்திகேசு சிவத்தம்பி (கரவெட்டி, யாழ்ப்பாணம், இலங்கை), (பிறப்பு மே 10, 1932) பவளவிழா மலர் வெளியீட்டுவிழாவில் . . .
நன்றி : வீரகேசரி வாரவெளியீடு
Posted by மாயா at 2 comments
Labels: இலக்கியவாதி
பன்முகப்படைப்பாற்றல் கொண்ட சைவத்தமிழ் அறிஞர்
இலங்கையில் பல்லாண்டுகளுக்கு முன்னரே தமிழும் சைவமும் முகிழ்ந்தெழுந்த யாழ்நகரின் மத்தியிலே ஆறுமுகநாவலரின் பிரசங்கப் பணி ஆரம்பிக்கப்பட்டு விளங்கும் வண்ணார்பண்ணையில் இந்துக் கலவன் தமிழ்ப் பாடசாலை மிகவும் காத்திரமான சமயப் பிரசங்கங்கள், தமிழ் உரையரங்குகளின் மையமாகத்திகழ்ந்தது. தமிழ் நாட்டிலிருந்தும் இலங்கையின் நாலாபக்கங்களிலுமிருந்தும் பண்டிதர்கள், வித்துவான்கள், புலவர்கள் அறிஞர்களென பற்பல துறை சார்ந்தவர்களும் தமது எண்ணங்களையும், திறமைகளையும், கருத்துகளையும் குவிக்கும் களமாக அப்பாடசாலை மேடையும் மண்டபமும் அமைந்திருந்தன.
அந்த மேடையிலே அடிக்கடி தோன்றி பல அறிஞர்களை அறிமுகப்படுத்தியும், தலைமைதாங்கியும், நன்றி நவின்றும் தமிழ்ப்பணிக்கே தன்னைக் கரைத்துக் கொண்ட பெரியார் மட்டுவிலைச் சேர்ந்த வேதப்பிள்ளையவர்களின் சிரேஷ்ட புதல்வன் ம.வே.திருஞானசம்பந்தபிள்ளை பிரபல சட்டத்தரணியாக விளங்கிய திரு.வே.மாணிக்கவாசகர் இவரது சகோதரரே. இவரது சகோதரர்களுள் மிக இளையவரான பண்டிதர் வே.மகாலிங்கசிவம் கோப்பாய் அரசினர் ஆசிரிய கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். இவர்களுடைய தந்தையார் மட்டுவில் உரையாசிரியர் வேற்பிள்ளையவர்கள் ஆறுமுகநாவலரின் மாணாக்கர் என அறிகிறோம். இவரே சிலகாலம் நாவலர் பெருமான் சிதம்பரத்தில் ஸ்தாபித்து வைத்த சைவப்பிரகாச வித்தியாசாலைக்கு அதிபராக நியமனம் பெற்றுச் சிறப்பாகக் கடமைகளை ஆற்றினார். `தந்தை எவ்வழி மைந்தர் அவ்வழி' என்ற ரீதியிலே தந்தையாரின் அடியொற்றி மைந்தரும் சிறந்த கல்விமான்களாக விளங்கிய பெருமை பூண்டதே இக் குடும்பம்.
நாவலர் பெருமான் வழியில் தமது வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொண்ட பண்டிதர் திருஞானசம்பந்தர் அவர்களும் மாணவர் பாட நூல்களாக அவர்களுடைய தரத்திற்கேற்றவகையில் பாடங்களைத் தொகுத்து "பாலபாடங்கள்" என்ற தலைப்பில் பதிப்பித்து வெளிக்கொணர்ந்தார். அக்காலத்தில் தமிழ்மொழியைப் பயிலும் மாணவருக்கு இலக்கண, இலக்கிய அடிப்படை அறிவோடிணைந்த இந்நூல்கள் மொழிவளர்ச்சிக்கான வித்தாகத் திகழ்ந்தன. அதேபோல சைவசமயத்தின் வளர்ச்சிக்காக `இந்து சாதனம்' என்ற பத்திரிகையைத் தொடங்கிச் சமயப்பணிபுரிந்தார்.
அக்காலத்தில் வண்ணார்பண்ணையில் புகழ்பூத்த இரு பத்திரிகையாசிரியர்கள் பத்திரிகைத்துறைக்கு தம்மை அர்ப்பணித்திருந்தனர். `இந்து சாதனம்' என்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பண்டிதர் திருஞானசம்பந்தரும், `தமிழ்மகள்' என்ற பத்திரிகையின் பணியை அலங்கரித்தவர் திருமதி மங்களம்மாள் மாசிலாமணி அவர்களும் ஆவர். மங்களம்மாள் ஒரு முன்னோடிப் பெண் பத்திரிகையாளராகத் திகழ்ந்ததோடு காந்தீய சேவைக்கும் சமூக சேவைக்கும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். ஆனால் பண்டிதர் அவர்கள் யாழ் பெருமைமிக்க பழம் இந்துக்கல்லூரியில் தமிழ் கற்பிக்கும் ஆசானாகவும் பல்லாண்டு காலம் பணிபுரிந்தார்.
எள்ளலும், நகைச்சுவையும் கூடிய கருத்தாழமும் காத்திரமுமான இவரது சொல்லாட்சிமிக்க சொற்பொழிவுகளைப் பலமுறையும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் வித்தையையும் கரைகண்ட வித்தகரே பண்டிதரவர்கள். `நாயினுக்கடியேன்' என அவர் ஆரம்பிக்கும் உரைகளோவு அவரது தோற்றமும் மிக மிக எளிமையாகவே காட்சி தரும்.
சைவத் தமிழ்பொலிவு பளிச்சிட துகில் வீசும் வெள்ளைவேஷ்டி, சிலவேளைகளில் அரைக்கை மேற்சட்டை, இன்றேல் காந்தீயப் போக்கில் மேலுடம்பில் ஒரு துண்டு, அகன்ற நெற்றியில் மூன்று குறிகளுடனான திருநீற்றுப் பூச்சு. அதன் மேல் வட்டவடிவமாக சந்தனப்பொட்டு. அதன் மீது குங்குமமும் அழகாக உட்கார்ந்திருக்கும். `பாகவதர்' பாணியிலான நீண்ட தலைமுடியும், அறிவுததும்பும் கண்களும் துள்ளுமீசையும் மேலும் அவருக்கு அழகூட்டுவன.
நாவலர் மரபில் தந்தையின் அடியையொற்றி நூல்கள் பல ஆக்கியும் அரிச்சந்திரபுராணம் - மயானகாண்டம், நளவெண்பா -கலிநீங்குகாண்டம், சிவராத்திரி மான்மியம், மயூரகிரிபுராண உரை என உரையெழுதியமை இவரது பணியில் குறிப்பிடக்கூடிய சிலவாகும். இவ்வுரை நூல்கள் அன்று எஸ்.எஸ்.சி.வகுப்பின் இலக்கிய நூல்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இவரது அறிவாற்றல் பட்டை தீட்டப்பெற்ற பல பரிமாணங்களாக பத்திரிகையாசிரியர், உரையாசிரியர், நூலாசிரியர்,சமயப் பிரசங்கி, சமூக சேவையாளர்,போதனா ஆசிரியர் என்பவற்றோடு நவீன இலக்கியத்திலும் குறிப்பிடக்கூடியளவு பல ஆக்கங்களுக்குத் கர்த்தாவாகப் பிரகாசிக்கின்றது. இவர் சிறுகதைகள், தொடர்கதைகள்,பல கற்பனைக் கட்டுரைகள் என்பவற்றையும் ஆக்கி இலக்கிய ஆர்வத்தை ரசனையை வளர்த்ததோடு பல சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் அதனுள் புகுத்தி மக்களை விழிப்படையைச் செய்யும் பணியிலும் ஈடுபட்டது இவரது சமுதாயப்பற்றினையும் அதனைச் சீர்திருத்திக் காண அவாவுறும் தன்மையையும் தொட்டுக் காட்டுகிறது. தன்னையும் தன்னைச் சூழ்ந்துள்ள மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள் துன்பங்கள்,சிக்கல்கள், மூடபக்தி, முரண்பாடு என பல நிலைகளையும் சுட்டிக்காட்டிச் சிந்திக்கத்தூண்டுவனவாக இவரது ஆக்கங்கள் அமைந்துள்ளன. இவர் நடத்திய பத்திரிகை `இந்துசாதனம்' இவற்றிற்குத் தளமாக அமைந்தது.
அதில் வாராவாரம் வெளிவந்த, துரைரத்தினம் - நேசமணி கோபால் நேசரத்தினம், காசிநாதன் நேசமலர் என்பன அக்கால வாசகர்களுக்கு ஆர்வத்தையும் அறிவையும் தூண்டும் படைப்புகளாக ஆக்கிய பெருமை பண்டிதரையே சாரும். அவருடைய எழுத்து நடையில் நக்கலும் நையாண்டியும் கூட கருத்துள்ளதாக யோசிக்கவே வைக்கும் தன்மையன. இவர் பெண்களைப் பற்றி இந்துசாதனம் பத்திராதிபர் குறிப்பாக இந்நாவல்களை மையமாக வைத்து இப்படி எழுதுகிறார்.
"ஒரு சாதியாரின் பழைய சீர்திருத்தத்தையும் புராதன பழக்கவழக்கங்களையும் மகத்துவத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து வளர்ப்பவர்கள் பிரதானமாகப் பெண்பாலினரேயாவரென அறிவுடையோர் கூறுகின்றனர்." என்ற இவருடைய கருத்து பெண்ணினத்தைப் போற்றியும் புகழ்ந்துமே குறிப்பிடுவதோடு குடும்பத்தின் விளக்காகவே பெண்களை இவர் அவதானிக்கும் பண்பும் புலனாகிறது. சைவம் தழைக்கவும் எழுச்சிபெறவும் உழைத்த இப்பெரியாரின் ஆக்கங்களிலே சைவசித்தாந்த உண்மைகளின் பொருண்மைகளும் இரண்டறக் கலந்திருப்பதாக அறிஞர்கள் குறிப்பிடுவர். சான்றாக பெரும் கடல் அலை அள்ளி வந்து கரையில் தள்ளிய நண்டுகளைப் பின்னர் ஒரு பெருந்திரைவந்து கரையில் மோதி மீண்டுபோகும்போது அள்ளிக்கொண்டு கடலுட் செல்லுதல் வினைகளையனுபவிக்கும்படி ஆன்மாவைப் பிறந்திறந்துழலவிட்ட இறைவன், இருவினையொப்பு மல பரிபாகமென்னுமிவைகளை அவ்வான்மா அடையுங்காலத்து அந்த இறைவனே அவ்வான்மாக்களை மார்ச்சார சம்பந்தமாய் (பூனைக் குட்டிகளைக் கௌவிச் செல்வதுபோல) வந்துஅடிமை கொள்வதை ஞாபகப்படுத்தியது. இது பண்டிதர் ஐயாவுடைய எழுத்து நடைச் சிறப்பின் சிலவரிகளே.
கருத்தாழமும் சிந்தனை செறிந்த சித்திரிப்புமான இவர் படைப்புகளில் நவீன இலக்கியத்தில் ஒரு சிறுகதையை வகைக்கு எடுத்துப் பார்த்தால் அதன் தலைப்பு `ஓம் நான் சொல்லுகின்றேன்' என்பது முத்தன் என்றொரு ஏழைச் சிறுவன் தனது கடும் உழைப்பாலும் அயரா முயற்சியாலும் முன்னேறிப் பெரும் புள்ளியாக மிளிருகின்றான். அவனது பணத்திற்கும் பெருமைக்கும் அடிமையாகிவிட்ட சமூகம் அவனை ஏதாவது அந்த ஏழை, அநாதை முத்தனை `முத்து', `முத்துக்குமாரு' என்றும் பின்னர் முத்துக்குமாரசுவாமி, முத்துக்குமார சுவாமிப்பிள்ளை என்றெல்லாம் மரியாதையோடு அழைத்து வணங்கித் தம்மையும் இனங்காட்டுகின்றனர். இதனை அவதானித்த முத்தன் இம்மரியாதையெல்லாம் உண்மையில் தனக்கல்ல, தான் இயந்திரமாகக் கஷ்டப்பட்டு உழைத்த பணப்பெட்டிக்கே என்பதைப் புரிந்துகொண்டு தனக்கு மரியாதை செய்வோருக்கெல்லாம் ஓம் நான் சொல்கிறேன் எனப் பதிலிறுளிப்பானாம். அதாவது இம் மேன்மையெல்லாம் எனக்கல்லவே எனது பணப் பெட்டிக்கே என்ற பொருள்படவே கூறிவைப்பானாம். பண்டிதர் ஐயாவினுடைய எள்ளலும், நகைச்சுவையும் பணத்திற்கு மக்கள் முண்டியடித்துக்கொண்டு நல்கும் மரியாதையையும் போலி மனப்பாங்கையும் விளக்க தனது அழகு தமிழிலே கருத்தாளம் மிக்க படைப்பாக ஆக்கியுள்ளபெருமையே பெருமை!
இத்தகைய படைப்பாற்றலும், சமுதாய உணர்வும் சீர்திருத்த மனப்பாங்கும் சைவத்தமிழ் பண்பாடும் அறிவாழமும் மிக்க நாவலர் பெருமானை அடியொற்றிவாழ்ந்த பத்திராதிபருமான பண்டிதர் திருஞானசம்பந்தபிள்ளை எமது பக்கத்துவீட்டுக்காரர் அயலவர் எமது தந்தையாரது நட்பைக் கொள்ளை கொண்டவர். எமது குடும்ப நண்பர் என்றெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது இவர்பற்றிய பெருமை இன்னுமின்னும் உயர்ந்து நிற்கின்றது. இவரது கடைசிச் செல்லமகள் `செல்வமகள்' இராஜேஸ்வரி தற்போது திருவாட்டி இராஜேஸ்வரி ஜெகானந்த குருவும் நானும் ஒருசாலை மாணாக்கிகள். சிறுமிகளாக இருந்தபோது பண்டிதர் ஐயாவுடைய பிரசங்கம் இந்துக் கலவன் பாடசாலையில் நடைபெறும் காலைக் கூட்டத்தின் மத்தியில் சத்தமிட்டும் ஓடித்திரிந்தும் குழப்பியபோது பண்டிதரிடம் ஏச்சும்வாங்கிய நாட்களையும் நினைத்துப் பார்க்கிறேன். அத்தகைய பெருமையும் எமக்குண்டு.
உலகம் பலவிதம் என்ற உண்மையைப் புரிந்துகொண்டு புகழொடு தோன்றித் தமிழ் சைவத் தொண்டிற்காகப் பல உயர்ந்த பண்புகளுடன் நாவலர் மரபில் நல்வாழ்வு வாழ்ந்து வழிகாட்டிய அறிஞர் மட்டுவில் வேற்பிள்ளை திருஞானசம்பந்தபிள்ளை பண்டிதர் அவர்கள் யாழ்ப்பாணம் பெற்றெடுத்த அறிஞர் வரிசையில் முன்னிடம் வகிப்பவர். வாழ்க அவர் திருநாமம்!
Posted by மாயா at 4 comments
Labels: எழுத்தாளர்
சில்லையூர் செல்வராசன் நினைவுதினம்
Posted by மாயா at 2 comments
Labels: நினைவுகள்
சேர் பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் பிறந்த தினம்
இன்று சேர் பொன்னம்பலம் அருணாசலம் (செப்டம்பர் 14 1853 - ஜனவரி 9 1924) அவர்கள் பிறந்த தினமாகும்
பொன்னம்பலம் அருணாசலம் கேட் முதலியார் என அழைக்கப்பட்ட அருணாசலம் பொன்னம்பலம், செல்லாச்சி ( சேர் முத்து குமாரசுவாமியின் சகோதரி ) ஆகியோரின் மூன்றாவது புதல்வர். குமாரசாமி முதலியார், சேர். பொன். இராமநாதன் ஆகியோரின் சகோதரர். இவரது மனைவியின் பெயர்: சுவர்ணம் நமசிவாயம். பிள்ளைகள் : அருணாசலம் மகாதேவா, சிவானந்தன் அருணாசலம் , அருணாசலம் இராமநாதன் ஆகியோர்
Posted by மாயா at 1 comments
சுவாமி ஞானப்பிரகாசரின் 132 ஆவது பிறந்த தினம்
இவர் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த மன்னர்களுள் ஒருவரான 6 ஆவது பரராஜசேகரனின் பரம்பரையைச் சேர்ந்தவரான இராசலிங்கம் சாமிநாதப் பிள்ளை, தங்கமுத்து தம்பதியினரின் மகனாக 30.08.1875 அன்று பிறந்தார். இவரது இயற்பெயர் வைத்தியலிங்கம்.அச்சுவேலியில் அமைந்திருந்த அமெரிக்க மிஷன் ஆங்கில பாடசாலையொன்றில் ஆரம்ப கல்வியைக் கற்ற அவர்இ யாழ் புனித பத்தரிசியார் கல்லூரியில் கல்வி பயின்றார்.1893 இல் புகையிரதப் பகுதியில் இலிகிதர் பரீட்சையில் முதலாவதாக தேறி கடிகமுகவயிலும் பின்னர் கொழும்பிலும் 3 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 1895 ஆம் ஆண்டு இறைபணிக்கென தம்மை அர்ப்பணித்து யாழ். குரு மடத்தில் சேர்ந்துகொண்டார். 01.12.1901 அன்று குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
இறையர்ப்பணிப்பு சேவையில் முதல் பங்காக ஊர்காவற்றுறையில் பணியாற்றினார். முதன் முறையாக அங்கு நூல் நிலையம் ஒன்றை உருவாக்கி மக்கள் மத்தியில் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தினார். வேதநூல்களை இரவலாகக் கொடுத்து மீண்டும் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை செயல்படுத்தினார். 50 இற்கும் மேற்பட்ட நூல்களை தாமே இயற்றி 30 இக்கும் மேற்பட்ட நூல்களை அச்சேற்றினார். 'ஞான உணர்ச்சி' எனும் நூல் வீரமாமுனிவரால் எழுதப்பட்டதல்ல சாங்கோபாங்க சுவாமிகளே எழுதினார் என இடித்துரைத்தார். நல்லூரில் புனித சவேரியார் ஆலயத்தை கட்டியெழுப்பி பல ஆண்டுகள் பணியாற்றினார். அதனால் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் என அழைக்கப்படலானார்
யாழ்ப்பாண வைபவமாலையில் தாம் கண்ட சரித்திர முரண்பாடுகளை யாழ்ப்பாண வைபவ விமரிசனம் என்னும் நூலில் எடுத்துக் காட்டினார்.புலவர் சுவாமி ஞானப்பிரகாசர் 22.01.1947 ஆம் ஆண்டு தனது 72 ஆம் வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெற்று இறைவனின் திருப்பாதம் சரணடைந்தார். அவரின் தமிழ் தொண்டைப் பாராட்டி தமிழ் நாட்டின் அறிவுக் களஞ்சியங்களாக விளங்கிவரும் ஆதீனங்களில் ஒன்றாகிய திருப்பணந்தாள் மடம்இஅவரை கௌரவித்து சன்மானமும் வழங்கியது. ஜேர்மனி அரசாங்கம் 1939 ஆம் ஆண்டும்இஎமது இலங்கை அரசாங்கம் 22.05.1981 ஆம் ஆண்டும் நினைவு முத்திரைகள் வெளியிட்டு கௌரவித்தன. உலகின் தொன்மைமிகு மொழியான தமிழும் அதன் சொந்தக்காரர்களான தமிழ் மக்கள் வாழும் அளவும் பன்மொழிப் புலவர் சுவாமி ஞானப்பிரகாசரின் நாமம் ஓயாத அலையாக எதிரொலிக்கும்.
Posted by மாயா at 0 comments
Labels: எழுத்தாளர்
இலங்கையின் சிறந்த நாடகக்கலைஞர்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள்
இனிவரும் காலங்களில் இவர்களை அகரவரிசைப்படி ஒழுங்குபடுத்தி எழுதமுனைகிறேன்
இலங்கையின் சிறந்த நாடகக்கலைஞர்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள்
1 ] கே.எஸ். பாலச்சந்திரன்
2 ] ஏ. இ. மனோகரன்
3 ] இரா. சிவசோதி வல்வெட்டித்துறை - நாடகக்கலைஞர்
4 ] கலையரசு கே. சொர்ணலிங்கம் - நாடகக்கலைஞர்
5 ] வரணியூரான் எஸ். எஸ். கணேசபிள்ளை - வரணி - நாடகக்கலைஞர்
6 ] மெற்றாஸ் மெயில் - நாடகக்கலைஞர்
7 ] காங்கேசந்துறை வீ.வீ. வைரமுத்து -நாடகக்கலைஞர்
8 ] டிங்கிரி சிவகுரு ஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள்
9 ] சக்கடத்தார் - நகைச்சுவை கலைஞர்
10 ] சில்லையூர் செல்வராஜன்
11 ] கலாநிதி செ. சிவஞானசுந்தரம்(நந்தி)
12 ] வி. பி. கணேசன்
13 ] கே. ஏ. ஜவாஹர்
14 ] விமல் சொக்கநாதன்
15 ] எஸ். ஆர். வேதநாயகம்
16 ] தேவன் அழகக்கோன்
17 ] ராம்தாஸ்
18 ] பொனி ரொபேர்ட்ஸ்
19 ] ஏ.,ரகுநாதன்
20 ] ஆர். அமிர்தவாசகம்
21 ] எஸ். ரி. அரசு
22 ] கே. துரைசிங்கம்
23 ] ஆர். காசிநாதன்
24 ] எஸ். பஸ்தியாம்பிள்ளை
25 ] ஆனந்தன்
26 ] ஜெயகாந்த்
27 ] எம். எஸ். ரத்தினம்
28 ] எம். உதயகுமார்
29 ] சித்திரலேகா மெளனகுரு
30 ] எம். எஸ். பத்மநாதன்
31 ] எம். எம். ஏ. லத்தீப்
32 ] கைலாசபதி
33 ] விஸ்வநாதராஜா
34 ] நவாலியூர் நா. செல்லத்துரை
35 ] கலைச்செல்வன்
36 ] ஹரிதாஸ்
37 ] எஸ். என். தனரட்னம்
38 ] Dr.கே. இந்திரகுமார்
39 ] இராசரட்னம்
40 ] எஸ். ஜேசுரட்னம்
41 ] ஏ. பிரான்சிஸ்
42 ] எஸ். எஸ். கணேசபிள்ளை
43 ] ஸ்டில் வீரமணி
44 ] சிவபாலன்
45 ] நேரு
46 ] சிவபாதவிருதையர்
47 ] சாம்பசிவம்
48 ] சித்தி அமரசிங்கம்
49 ] எஸ். என். தனரட்ணம்
50 ] செல்வம் பெர்னாண்டோ
51 ] தனரட்னம்
52 ] டீன் குமார்
53 ] விஜயராஜா
54 ] எம். ஏகாம்பரம்
55 ] கார்த்திகேசு
56 ] திருச்செந்தூரன்
57 ] ஆர். சிதம்பரம்
58 ] சீதாராமன்
59 ] கந்தையா
60 ] ஸ்ரீதர்
61 ] மோகன்குமார்
62 ] எஸ். விஸ்வநாதராஜா
நடிகைகள்
1 ] ஜி. நிர்மலா
2 ] சுபாஷினி
3 ] ருக்மணி தேவி
4 ] சந்திரகலா
5 ] ஜெயதேவி
6 ] சந்திரகலா
7 ] ஆனந்தராணி
8 ] ஜெயதேவி
9 ] ஹெலன்குமாரி
10 ] அனுஷா
Posted by மாயா at 11 comments
Labels: திரைப்பட நடிகர்கள்
கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பிறந்த தினம்
"திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்" என்னும் மகாகவி பாரதியின் வாக்கிற்கிணங்க, இந்திய கலாதத்துவத்தை மேல் நாட்டவரும் மதிக்கும் வண்ணம் வெளிப்படுத்திய பெருமைக்குரியவர் கலாயோகி ஆனந்தக் குமாரசுவாமியாவார்.
Arts and Craft of India and Ceylon
Bronzes from Ceylon
Rajput Paintings
Hinduism and Buddhism
Buddha and the Gospel of Buddha
A new Approach to the Vedas
Posted by மாயா at 8 comments
Labels: எழுத்தாளர்
இலங்கைக்கலைஞர் வி.பி.கணேசன் ஞாபகார்த்தப்பேரவை
Posted by மாயா at 6 comments
Labels: புகைப்படம்
ஈழத்துக் கலைஞர்கள் [ பாகம் 1 ]
வணக்கம் நண்பர்களே !
இலங்கை வாழ் கலைஞர்கள் மற்றும் மறைந்த கலைஞர்கள் புலம்பெயர்ந்து வாழும் கலைஞர்களின் விபரங்களை என் சக்திக்கு ஏற்றவாறு திரட்டித் தரலாமென்றிருக்கிறேன்
முதலில் ஈழத்துக்கவிஞர்கள் பற்றிய தகவல்களைதருகிறேன் தருகிறேன் இனிவரும்காலங்களில் அவர்களைப்பற்றிய முழு விபரங்களை சேகரித்து தரலாமென்றிருக்கிறேன் நான் சிறியவன் பிழைகள் ஏதுமிருப்பின் பின்னூட்டம் மூலம் தெரிவிக்கலாம் பின்னூட்டங்களே எனக்கு நீங்கள் தரும் உற்சாகம்
மற்றும் ஈழத்துக்கவிஞர்கள் பற்றி அறிந்துள்ள கானாபிரபா அண்ணா சின்னக்குட்டியார் யோகன் அண்ணா வெற்றி நீங்கள் இதிலுள்ள பிழைகளை நிச்சயம் திருத்துவீர்கள் என நினைக்கிறேன்
1] கல்லடி வேலுப்பிள்ளை
2] வீரமணி ஐயர் - இணுவில்
5] காசி ஆனந்தன் (காத்தமுத்து சிவானந்தன்) - மட்டக்களப்பு
6] தாமரைத்தீவான் - திருகோணமலை
11] போராட்டக் கவிஞர் சுபத்திரன் - மட்டக்களப்பு
12 ] சோலைக்கிளி( உதுமாலெவ்வை முகம்மது அதீக் ) - கல்முனை
13] பொன் கணேசமூர்த்தி - யாழ்ப்பாணம்
14] மன்னவன் கந்தப்பு
15] பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை
16 ] சில்லையூர் செல்வராசன்
59] சந்திரபோபோஸ்
இயன்றவரை இந்தப்பயணம் தொடரும்
நன்றி
Posted by மாயா at 10 comments
Labels: ஈழத்துக்கவிஞர்கள்
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
1 ) சமுதாயம் (1962)
2) தோட்டக்காரி (1963)
3) கடமையின் எல்லை (1966)
தயாரிப்பாளர் : எம். வேதநாயகம்
கதை : வில்லியம் ஷேக்ஸ்பியர்
திரைக்கதை : வித்துவான் ஆனந்தராயர்
நடிப்பு : தேவன் அழகக்கோன் , எம். உதயகுமார் , பொனி ரொபேர்ட்ஸ் , ஏ.,ரகுநாதன் , ஐராங்கனி , ஜி. நிர்மலா , ஆர். அமிர்தவாசகம் , எஸ். ரி. அரசு , கே. துரைசிங்கம் , ஆர். காசிநாதன் , எஸ். பஸ்தியாம்பிள்ளை
* யாழ்ப்பாண ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆங்கில விரிவுரையாளரான எம். வேதநாயகத்தினால் தயாரிக்கப்பட்டது. இது ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்(Hamlet) என்ற ஆங்கில நாடகத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட சரித்திரப்படம் ஆகும்.
4) பாச நிலா (1966)
5) டாக்சி டிறைவர் (1966)
6) நிர்மலா (1968 )
7) மஞ்சள் குங்குமம் (1970)
8) வெண் சங்கு (1970)
9) குத்துவிளக்கு (1972)
தயாரிப்பாளர் : எஸ். துரைராஜா
நடிப்பு : ஆனந்தன் , ஜெயகாந்த் , லீலா நாராயணன் , பேரம்பலம் , எம். எஸ். ரத்தினம் , எஸ். ராம்தாஸ் , நாகேந்திரா
பெரும்பாலான வெளிப்புறக்காட்சிகள் வடமராட்சியில் பருத்தித்துறையை அண்டிய பகுதிகளில் படமாக்கப்பட்டன. பிரபல கட்டிடக்கலை நிபுணரான வீ. எஸ். துரைராஜா தயாரித்தார்
10) மீனவப் பெண் (1973)
11) புதிய காற்று (1975)
12) கோமாளிகள் (1976)
13) பொன்மணி(1977)
நடிப்பு : பாலச்சந்திரன் , சுபாஷினி , சித்திரலேகா மெளனகுரு , எம். எஸ். பத்மநாதன் , கலாநிதி செ. சிவஞானசுந்தரம்(நந்தி) , கைலாசப்தி
* சிங்களத் திரைப்பட இயக்குனரான தர்மசேன பத்திராஜாவினால் இயக்கப்பெற்றது.
14) காத்திருப்பேன் உனக்காக (1977)
தயாரிப்பாளர் : எம். ஜெயராமச்சந்திரன், எம். தீனதயாளன், எம். செல்வராஜ்
கதை : எம். செல்வராஜ்
திரைக்கதை : நவாலியூர் நா. செல்லத்துரை
நடிப்பு : என். சிவராம்,கீதாஞ்சலி , ரவி செல்வராஜ்,விஸ்வநாதராஜா ,நவாலியூர் நா. செல்லத்துரை ,ருக்மணி தேவி,எம். எம். ஏ. லத்தீப் , தர்மலிங்கம்
* சிறந்த நடிப்பு,இனிய பாடல்கள், நல்ல திரைக்கதை என்று இருந்தபோதிலும், நாட்டில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக, எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
15) நான் உங்கள் தோழன் (1978)
இயக்குனர் : எஸ். வி. சந்திரன்
தயாரிப்பாளர் : வி. பி. கணேசன்
கதை : கலைச்செல்வன்
நடிப்பு : வி. பி. கணேசன் , சுபாஷினி , எஸ். ராம்தாஸ் , எம். எம். ஏ. லத்தீப் , கே. ஏ. ஜவாஹர் , கலைச்செல்வன் , ஹரிதாஸ் , ருக்மணி தேவி , ஜெனிடா , சந்திரகலா , எஸ். என். தனரட்னம் , விமல் சொக்கநாதன் , ஜெயதேவி
1978ம் ஆண்டு இலங்கை திரைப்பட உலகிற்கு ஒரு முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில் மொத்தம் 6 ஈழத்து தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. வி. பி. கணேசன் தனது முதலாவது படமான புதிய காற்றுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து எடுத்த திரைப்படம்.அவரே இந்தமுறையும் பிரதான பாத்திரத்தில் நடித்தார்.
* கொழும்பு, மலையகம் என்பவற்றோடு யாழ்ப்பாணத்து நகர வீதிகளிலும், மட்டக்களப்பு மாமாங்கத் திருவிழாவிலும் கூட படப்ப்டிப்பு நடத்தினார்கள்.
* அக்கால இந்தியப்படங்களில் சிலவேளைகளில் அரசியல் தலைவர்களின் மகாநாடுகள், இறுதி ஊர்வலங்கள் என்பனவற்றை இணத்துக் கொள்வதைப் போல, இத்திரைப்படத்தில் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் இறுதி ஊர்வலம் இணைக்கப்பட்டது.
16) வாடைக்காற்று (1978)
தயாரிப்பாளர் : ஏ. சிவதாசன், ஆர். மகேந்திரன், எஸ். குணரட்னம்
கதை : செங்கை ஆழியான்
திரைக்கதை : செம்பியன் செல்வன், கே. எம். வாசகர்
நடிப்பு : ஏ. இ. மனோகரன் , கே. எஸ். பாலச்சந்திரன் , Dr.கே. இந்திரகுமார் , சந்திரகலா , ஆனந்தராணி , இராசரட்னம் , எஸ். ஜேசுரட்னம் , ஏ. பிரான்சிஸ் , கே. ஏ. ஜவாஹர் , எஸ். எஸ். கணேசபிள்ளை , ஜெயதேவி , லடிஸ் வீரமணி , டிங்கிரி கனகரட்னம் , சிவகுரு , சிவபாலன் , நேரு
கமலாலயம் மூவிஸ் தயாரித்த இந்த திரைப்படம் மன்னார் பகுதியில் உள்ள பேசாலையிலும், வட்டுக்கோட்டை, கந்தரோடை, கல்லுண்டாய், வல்லிபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கப்பட்டது. மீனவ சமூகத்தின் வாழ்வினை கூறும் இத்திரைப்படம் 1978 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினைப் பெற்றது.
* பல சிங்களத் திரைப்படங்களை இயக்கிய பிரேம்நாத் மொறாயஸ் இந்த திரைப்படத்தை இயக்கினார். கே. எஸ். பாலச்சந்திரன் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஈழத்து ரத்தினம், சில்லையூர் செல்வராசன் ஆகியோர் இயற்றிய பாடல்களை ஜோசப் ராசேந்திரன், முத்தழகு, சுஜாதா அத்தநாயக்க ஆகியோர் பாடினார்கள். நடன அமைப்பை வேல் ஆனந்தனும், சண்டைப் பயிற்சியை நேருவும் கவனித்துக் கொண்டார்கள்.
* 'வாடைக் காற்று' நாவலின் கதைக்களம் நெடுந்தீவாக இருந்தபோதிலும், போக்குவரத்துச்சிரமங்களின் காரணமாக அதே இயற்கைச்சூழலில், பனங் காணிகள், மட்டக் குதிரை (Ponies), கரை வலை என்பனவுள்ள பேசாலைக் கிராமத்தில் தான் பெரும்பகுதி படமாக்கப்பட்டது.
* இலங்கைத் தமிழ்த் திரைப்படமொன்றின் பாடல்கள் இசைத்தட்டாக முதலிலேயே வெளிவந்தது என்ற பெருமையைப் பெற்றது, 'வாடைக்காற்று' பாடல்கள்தான்.
* வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே என்ற இந்தப் பாடல் வானொலி மூலம் இலங்கை, இந்திய ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
மேலும் விபரங்களுக்கு கானாபிரபா அண்ணாவின் வாடைக்காற்று பற்றிய பதிவு
17) தென்றலும் புயலும் (1978)
தயாரிப்பாளர் : மருத்துவர் எஸ். ஆர். வேதநாயகம்
திரைக்கதை : எஸ். ஆர். வேதநாயகம்
நடிப்பு : சிவபாதவிருதையர் , ஹெலன்குமாரி , சாம்பசிவம் , எஸ். ஆர். வேதநாயகம் , சித்தி அமரசிங்கம் , ஏ. ஜவாஹர் , டீன் குமார் , செல்வம் பெர்னாண்டோ , சந்திரகலா , தனரட்னம
யாழ்ப்பாணத்தில் ஒரேநேரம் "லிடோ" திரையரங்கில் "தென்றலும் புயலும்" திரைப்படமும், "ராணி" திரையரங்கில் "வாடைக்காற்று" திரைப்படமும் காண்பிக்கப்பட்டன. இப்படி இரண்டு ஈழத்து தமிழ்த்திரைப்படங்கள் ஒரு நகரத்தில் சமகாலத்தில் திரையிடப்படுவது மிகவும் அரிதானதென அந்தக்கால இளைஞர்கள் கதைத்தனர்
18) தெய்வம் தந்த வீடு (1978)
19) ஏமாளிகள் (1978)
தயாரிப்பாளர் : ஏ. எல். எம். மவுஜூட்
கதை : கே ஏ எஸ். ராம்தாஸ்
நடிப்பு : என். சிவராம் , ஹெலன்குமாரி , ராஜலட்சுமி , ரி. ராஜகோபால் , எஸ். செல்வசேகரன் , கே. ஏ. ஜவாஹர் , இரா பத்மநாதன்
இசை : கண்ணன் - நேசம்
கோமாளிகள் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து எஸ். ராம்தாஸ் கதை, வசனம் எழுதி வெளியிட்ட இரண்டாவது படம்.
20) அனுராகம் (1978)
இயக்குனர : யசபாலித்த நாணயக்கார
தயாரிப்பாளர் : யசபாலித்த நாணயக்கார
திரைக்கதை : பி. எஸ். நாகலிங்கம்
நடிப்பு : என். சிவராம் , சந்திரகலா , அனோஜா , எஸ். என். தனரட்னம் , எஸ். விஸ்வநாதராஜா , டொன் பொஸ்கோ , செல்வம் பெர்னாண்டோ
* சமகாலத்தில் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே கதை படமாக்கப்பட்டது .கீதிகா என்ற பெயரில் சிங்களப் படமாக தயாரித்தார்கள்.பிரதான பாத்திரங்களில் சிங்களப் படத்தில் விஜய குமாரணதுங்கவும், மாலினி பொன்சேகாவும் நடித்தார்கள்.
* இத்திரைப்படத்தை தயாரித்து இயக்கிய யசபாலித்த நாணயக்கார என்பவரே இதே போல இரண்டு மொழிகளிலும் படமாகிய நாடு போற்ற வாழ்க திரைப்படத்தையும் இயக்கியவர். இவர் இடதுசாரி அரசியல்வாதியான வாசுதேவ நாணயக்காரவின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.
21) எங்களில் ஒருவன் (1979)
22) மாமியார் வீடு (1979)
23 ) நெஞ்சுக்கு நீதி (1980)
24) இரத்தத்தின் இரத்தமே (1980)
25) அவள் ஒரு ஜீவநதி (1980 )
இயக்குனர் :ஜே. பி. ரொபேர்ட், ஜோ மைக்கல்
கதை :மாத்தளை கார்த்திகேசு
நடிப்பு : கே. எஸ். பாலச்சந்திரன் , டீன் குமார் , விஜயராஜா , எம். ஏகாம்பரம் , கார்த்திகேசு , திருச்செந்தூரன் , அனுஷா , ஆர். சிதம்பரம் , சீதாராமன் , , கந்தையா , ஸ்ரீதர் , மோகன்குமார் , சந்திரகலாஈழத்து ரத்தினம், சி. மெளனகுரு, கார்த்திகேசு ஆகியோர் இயற்றிய பாடல்களுக்கு, இசை அமைப்பாளர் எம். எஸ். செல்வராஜா இசை அமைக்க, வி. முத்தழகு, கலாவதி, எஸ். வி. ஆர். கணபதிப்பிள்ளை, சுஜாதா அத்தனாயக்க, ஜோசப் ராஜேந்திரன் ஆகியோர் பாடினார்கள்.
26) நாடு போற்ற வாழ்க (1981)
கதை : எஸ். என். தனரட்ணம்
நடிப்பு : வி. பி, கணேசன் , கே. எஸ். பாலச்சந்திரன் , கீதா குமாரதுங்க , ஸ்வர்ணா மல்லவராச்சி , எஸ். ராம்தாஸ் , ஏ. லத்தீப் , எம். ஏகாம்பரம் , உபாலி செல்வசேகரன் , டொன் பொஸ்கோ , மணிமேகலை , புஸ்பா , ரஞ்சனி
* இலங்கையின் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான வி. பி. கணேசன் தயாரித்த மூன்றாவது திரைப்படம் இது. மலையகத்தில் தியத்தலாவை, பண்டாரவளை, ஹப்புத்தளை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது.
* ஒரே நேரத்தில் இந்தக்கதை 'அஞ்சானா' என்ற பெயரில் சிங்களப் படமாகவும் எடுக்கப்பட்டது. இதில் பிரபல நடிகர்களான விஜய குமாரதுங்க ரொபின் பெர்னாண்டோ இருவரும் முக்கிய பாத்திரங்களில் ந்டித்தார்கள்.
27) பாதை மாறிய பருவங்கள் (1982)
28) ஷார்மிளாவின் இதய ராகம் (1993)
தயாரிப்பாளர் : பேராதனை ஜுனைதீன், ஜெக்கியா ஜுனைதீன்
கதை : ஜெக்கியா ஜுனைதீன்
திரைக்கதை : பேராதனை ஜுனைதீன்
நடிப்பு : சசி விஜேந்திரா , வீணா ஜெயக்கொடி , கே. ஏ. ஜவாஹர் , எஸ். ராம்தாஸ் , கே. எஸ். பாலச்சந்திரன் , எம். எம். ஏ. லத்தீப் , ஜோபு நசீர் , எஸ். விஸ்வநாதராஜா , எஸ். என். தனரட்ணம், கமலஸ்ரீ , ராஜம் , திவானி , ஜெயப்பிரியா , பாத்திமா , சுஸ்பிகா
* இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது தமிழ் வர்ணத்திரைப்படம்.
* 1989ல் த்யாரித்து முடிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 4 வருடங்கள் கழிந்தபின்னரே 1993ல் திரைக்கு வந்தது.
* இத்திரைப்படம் "ஒப மட்ட வாசனா" என்ற தலைப்பில் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
இப்போது தமிழ்ப்படங்கள் முற்றிலுமாக வெளிவருவது இல்லை காரணம் அயல்மொழி திரைப்படங்களின் காரணமாயிருக்குமா ?
Posted by மாயா at 2 comments
Labels: இலங்கைத்திரைப்படங்கள்
ஈழத்துக்கலைஞர்கள் வலைப்பூ அறிமுகம்
Posted by மாயா at 4 comments