கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பிறந்த தினம்

"திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்" என்னும் மகாகவி பாரதியின் வாக்கிற்கிணங்க, இந்திய கலாதத்துவத்தை மேல் நாட்டவரும் மதிக்கும் வண்ணம் வெளிப்படுத்திய பெருமைக்குரியவர் கலாயோகி ஆனந்தக் குமாரசுவாமியாவார்.

இவர் இலங்கையின் சிறந்த எழுத்தாளருமாவார்

இவர் 1877ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 22ஆந் திகதி கொழும்பு மாநகரிற் பிறந்தார். தாய்நாட்டின் தன்னிகரற்ற பெருமைகளைப் பிறநாட்டவருக்கு விளங்க வைக்கும் தன்மையானது இவரது பாரம்பரியமான முதுசொத்தாகும். இவரின் தந்தையாராகிய சேர் முத்துக்குமாரசுவாமி அவர்கள்தாம் 'அரிச்சந்திர நாடக'த்தை ஆங்கிலத்தில் எழுதி விக்டோரியா மகாராணிக்குச் சமர்ப்பித்தவர் .

ஆனந்தக் குமாரசுவாமி அவர்களின் தாயார் எலிசபெத் கிளே பீபி என்னும் ஆங்கிலப் பெண்மணியாவார். தந்தையார் 1879 இல் கொழும்பிலே அமரத்துவமெய்தினார். அதன் பின்பு, தாயாரும் தனயனும் இங்கிலாந்திலேயே வசித்து வந்தனர். விக்கிளிவ் கல்லூரியிலும் பின்பு லண்டன் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்ற இவர் 1900ஆம் ஆண்டில் தாவரவியலையும் புவியியலையும் பாடங்களாகக் கொண்டு பீ. எஸ்ஸி. பரீட்சையில் முதலாம் பிரிவிற்றேறினார். 1903இல் முதன் முதலாக இலங்கைக்கு வந்து 1906ஆம் ஆண்டு வரையும் தாதுப் பொருள் ஆராய்ச்சிப் பகுதியின் தலைவராகக் கடமையாற்றினார். இக் காலத்திலேயே 'தோரியனைட்' என்னும் கனியத்தைக் கண்டுபிடித்தார். இதற்காகவே இவருக்கு லண்டன் பல்கலைக்கழகம் கலாநிதிப் (டக்டர்) பட்டம் வழங்குக் கௌரவித்தது. இந்த உத்தியோக தோரணையாக நாட்டின் பலபாகங்களுக்குஞ் செல்லும் பொழுது பாழடைந்து கிடந்த கோயில்களையும், தாதுகோபங்களையும், விகாரைகளையும், அவற்றின் சிற்பத் திறனையும் இவர் ஆராயத் தொடங்கினார். அத்துடன் கிராமப்புறங்களிலிருந்து தொழில் புரிந்து வந்த சிற்போவியப் பரம்பரையினர் சிலரையுஞ் சந்தித்து அவர்களது குருகுலக் கல்வி முறையைப் பற்றியும் ஆராய்ந்துள்ளார். இந்தியக்கலைகளின் தெய்வாம்சத்தினை (இறைமையை, இறைமை மாண்பினை)) உலகிற்கு எடுத்துக் காட்டியசிறந்த தூதுவராகக் கருதப்படுபவர். இறைவனின் ஐந்தொழிலைப் (பஞ்சகிருத்தியத்தைப்) பிரதிபலிக்கும் சிவநடனத்தை விளக்கி 1912 இலே 'சித்தாந்த தீபிகை'யில் எழுதிய ஆங்கிலக் கட்டுரை மூலம் இந்தியக் கலைகளின் சிறப்பினை உலகிற்கு அறிமுகப்படுத்திய முன்னோடியாகக் கொள்ளப்படுகிறார். ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

சகோதரி நிவேதிதையுடன் இணைந்து பௌத்த புராணக்கதைகளையும் தொகுத்துத் தந்துள்ளார். 'பிரபுத்த பாரதா' என்ற சஞ்சிகையில் (இதழில்) 1913, 1914, 1915 ஆம் ஆண்டுகளில் தாயுமானவர் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் சிலவற்றை வழங்கினார்
இவர் கீழைத்தேசக் கலைகளின் மறுமலர்ச்சிக்கு ஆற்றிய பெரும்பணி இந்திய சுதந்திரத்துக்குக் காந்தியடிகள் ஆற்றிய தூய பணியையும், இந்துசமய மறுமலர்ச்சிக்கு சுவாமி விவேகானந்தர் அவர்கள் ஆற்றிய சிறந்த பணியையும் நிகர்த்தவையாகும்.

ஆனந்த குமாரசுவாமி அவர்கள் தமது எழுபதாவது வயதில் செப்டம்பர் 9 1947) இல் அமெரிக்காவில் பொஸ்ரன் (பாஸ்ட்டன்) நகரில் காலமானார்.
விஞானக் கலாநிதியாகவும் தேசியத் தந்தையாகவும் திகழ்ந்து கலைஞானியாகவும் தத்துவஞானியாகவும் மிளிர ஆனந்த (கெண்டிஷ்) குமாரசுவாமி ஒருவரினால்தான் இயலும். இவர் ஈழத்திற்கு மாத்திரமேயன்றி உலகிற்கே ஒரு திலகமாகும்.


வெளிவந்த நூல்கள்
Medieval Sinhalese Art
Arts and Craft of India and Ceylon

Bronzes from Ceylon

Rajput Paintings
The History of Indian and Indonesian Art
The Dance of Siva
Hinduism and Buddhism

Buddha and the Gospel of Buddha
A new Approach to the Vedas
Spiritual Authority and Temporal Power
இலங்கையின் வெண்கல உருவங்கள்
நன்றி : விக்கிபீடியா

8 comments:

said...

மாயா,
அப்பு ராசா,
தமிழர்களை அடிக்க புத்த பிக்குகளுக்கு பொல்லு எடுத்துக் கொடுத்த மாதிரியான பல செயல்களைச் செய்தவர்தான் இந்த ஆனந்த குமாரசாமி. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த மாதிரி புத்த கலைகளை மீட்கிறேன் எண்டு சிங்கள இனவாதம் வளர தெரிஞ்சோ தெரியாமலோ உதவி செய்தவர்.


இலங்கையின் தமிழ்பகுதிகளிலோ அல்லது தமிழுக்கோ இவர் பெரிசா ஒண்டும் செய்யேல்லை.

இவற்றை தகப்பன் முத்துக்குமாரர் இலங்கை குடியாட்சி அரசில் தமிழ் மக்களின் பிரதிநிதி. ஆனால் அவர் கன காலம் வாழ்ந்தது லண்டனிலை.

தமிழர்களின் பிரச்சனைகளைப் பற்றி ஒண்டும் அலட்டிக் கொள்ளேல்லை.
இவர் இல்லாத போது பறங்கிய இனத்தவர்தான் தமிழர் பிரச்சனை பற்றி சபையிலை பேசினவை.


இவற்றை உறவுக்காரர்கள்தான் சேர்.பொன்னம்பலம் இராமநாதன், சேர்.பொன்னம்பலம் அருனாசலம் ஆக்கள். பிறகு அருனாசலத்தாற்ரை மகன் மகாதேவா.

இந்த மகாதேவா செய்த கூத்து தெரியுமோ? பாவம் ஜி.ஜி. பொன்னம்பலம் 50-50 கேட்டு லண்டனிலை போய் வாதிடப் போன நேரம், சிங்கள அரசில் சேர்ந்து ஜி.ஜி. எதிர்த்த அரசியல்யாப்பை ஏற்றுக் கொண்டவர்.
இராமநாதன்ரை மருமேன் நடேசர்.

இப்பிடி அப்பு இவேன்ரை பரம்பரை 6 தலைமுறையா அதிகாரத்திலை இருந்தவை.

இண்டைக்கு எங்கடை நிலைமைக்கு இவையளுக்கு முக்கிய பங்குண்டு.

நான் ஏன் இவற்றைச் சொல்கிறேன் என்றால் இவர்களின் மறுபக்கங்களையும் நாம் தெரிஞ்சிருக்க வேணும். மற்றும்படி உங்களின் பதிவுக்கு நன்றி.

said...

வெற்றி அண்ணை

சின்னப் பொடியளைப் பயப்பிடுத்தாதேங்கோ ;-)

said...

/* சின்னப் பொடியளைப் பயப்பிடுத்தாதேங்கோ ;-) */

:-)).
பிரபா,


இதுக்கெல்லாம் மாயா பயப்படுற ஆளில்லை.:-))

ஆனால் வரலாறு எண்டு வரும் போது எல்லாப் பக்கத்தையும் தெரிஞ்சிருக்க வேணும் எண்டதாலைதான் சொன்னனான்.:-)

மாயா, மாற்றுக் கருத்துச் சொன்னால் குறைநினைக்க மாட்டிங்கள்தானே?

பிரபா,
உங்கடை நல்லூர் தொடர் பதிவு பார்த்தனான். இன்னும் வாசிக்கேல்லை. இந்த வார இறுதியில் வாசிச்சுப் போட்டு, அங்கையும் சிலவேளை மாற்றுக் கருத்துக்களோடை வருவேன். :-))

said...

வணக்கம் வெற்றி கானா பிரபா
உங்கள் வரவுக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி

வெற்றி அண்ணா மாற்றுக்கருத்துச் சொன்னால் நிச்யமாக வரவேற்பேன்


ஏனெனில் நான்
நான் செய்வதற்கெல்லாம் சரியெனத்தலையாட்டும் ஆயிரம் நண்பர்கள் தேவையில்லை நான் செய்யும் பிழைகளை தட்டிக்காட்ட ஒரு நண்பனே தேவை ! !

என்ற கொள்கையுடையவன்

மற்றும் யாழ்ப்பாணத்தின் பல அறிஞர்ப் பெருமக்களால் நிறுவப்பெற்ற 'தமிழ்ச் சங்க'த்தின் சார்பாக இவருக்கு "வித்தியா விநோதன் "என்னும் பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக படப்புத்தகங்களில் படித்ததாக நினைவு

மற்றும்படி பெரிதாக வரலாறு ஏதும் அறியாதவன் ஓர் எழுத்தாளர் என்ற வகையில் இவரைப்பற்றி பதிந்தேன்

நன்றி

said...

மாயா!
இளமையில் பாடப்புத்தகத்திலும்; பின் ஒரு ஈழத் திரைப்படப்பாடலிலும் (ஈழத் திருநாடே என் அருமைத் தாயகமே) இவர் பெயர் கேள்விப்பட்டேன்; இந்தப் பதிவு மூலம்;வெற்றியால் இவர் மறு பக்கமும் கிடைத்துள்ளது.
இன்றைய ஊடகங்கள் இரண்டு பக்கக் கருத்துக்கும் இடமளிப்பவையாக இருப்பதை;மகிழ்வுடன் வரவேற்போம்.
அத்துடன் இப்போ இரண்டு பக்கக் கருத்திலையென எதுமே இல்லை எனும் நிலை.
தெரிவு;தெளிவு....நம் கடன்

said...

அது உண்மை தான்
இவருக்கு உலகளாவிய ரீதியில் இருந்த மதிப்பைப் பார்த்து நான் பெருமைப்பட்டேனே தவிர இவரது மறுபக்கத்தைப்பார்க்கமுடியவில்லை

வெற்றியால் இவர் மறு பக்கமும் கிடைத்துள்ளது.

உங்கள் வரவுக்கு நன்றி

said...

http://noolaham.net/library/books/02/119/119.htm
கலாயோகி ஆனந்த கெ. குமாரசுவாமி - ஆ. தம்பித்துரை எழுதியது

said...

நன்றி