ஈழத்தின் நாதஸ்வர சக்கரவர்த்தி கானமூர்த்தி அவர்களுக்கு அஞ்சலிகள்

ஈழத்து இசை உலகில் நாதஸ்தவரச் சக்கரவர்த்திகளில் ஒருவரான வி.கே.கானமூர்த்தி (வயது 60) நேற்று முன்நாள் இரவு யாழ்ப்பாணத்தில் காலமானார்.சிறிது காலம் நோய் வாய்ப்பட்டிருந்த இவர், யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்கைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்நாள் புதன்கிழமை இரவு 11 மணியளவில் காலமானார்.

நாதஸ்வர உலகில் இரட்டையர்களான கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி சகோதரர்களில் இவர் மூத்தவர்.கோண்டாவில் மேற்கு காளி கோவிலடியைச் சேர்ந்த இவர், 1948 ஆம் ஆண்டு பிறந்தார்.தனது 14 ஆவது வயதில் நாராயணசாமி என்பவரிடம் நாதஸ்வரக் கலையை முறைப்படி பயின்றார். அதன் பின்னர் இவர் மாவிட்டபுரம் இராசாவிடம் இக்கலையின் நுணுக்கங்களை கற்றறிந்தார்.

இளவயதிலேயே இசைக்கச்சோரிகளை நடத்திய இவர், பின்னர் தனது இளைய சகோதரனான பஞ்சமூர்த்தியுடன் இணைந்து கச்சேரிகளை நடத்தினார்.

மிக நீண்டகாலமாக நாதஸ்வர உலகில் இரட்டையர்களாகப் பிரகாசித்த இவர்களின் கச்சேரி இடம்பெறாத கோவில்கள், பொது இடங்கள், நிகழ்ச்சிகளே இல்லை எனும் அளவிற்கு அகில இலங்கை முழுவதும் புகழ் பெற்றிந்தனர்.

ஈழத்தில் மட்டுமல்லாது இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள தேசங்களுக்கு எல்லாம் சென்று இந்த இரட்டையர்கள் தங்கள் புகழ் பரப்பியதுடன் வெளிநாட்டவர்களாலும் போற்றப்பட்டனர்.

இந்த இரட்டையர்களின் தொடக்க காலத்தில் ஒருமுறை சென்னையில் இவர்களின் இசைக்கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்த போது அந்த வழியால் சென்ற இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலக்சுமி தனது பயணத்தை இடையில் நிறுத்திவிட்டு இவர்களின் கச்சேரிக்குச் சென்று முழுமையாக இரசித்ததுடன் இருவரையும் பெரிதும் பாராட்டியிருந்தார்.இந்த இரட்டையர்களுக்கு யாழ். குடாநாட்டில் பெரும் இரசிகர் கூட்டமே இருந்தது. இவர்களின் கச்சேரி எங்கு நடந்தாலும் அங்கு பெரும் கூட்டம் சேர்ந்து விடுமளவுக்கு அனைவரையும் இவர்கள் தங்கள் இசைப்புலமையால் கட்டிப் போட்டிருந்தனர்.

கர்நாடக இசையில் மட்டுமல்லாது அதனூடாக இவர்கள் மெல்லிசையிலும் புகழ் பெற்றிருந்தனர்.2005 ஆம் ஆண்டில் இந்த இரட்டையர்களுக்கு சிறிலங்கா அரசு கலாபூசணம் விருது வழங்கி கெளரவித்தது.கோவில்கள், பொது அமைப்புக்கள், இசைச்சங்கங்களால் பல கெளரவ விருதுகளையும் பட்டங்களையும் இவர்கள் பெற்றிருந்தனர்.

நாட்டுச் சூழ்நிலையால் இசை விற்பன்னர்கள் சற்று நலிவுற்றிருந்த போதும் தனது பிறந்த மண்ணில் தோடர்ந்து கலைப்பணியாற்றி வந்த நிலையில் கானமூர்த்தி நேற்று முன்நாள் காலமானார்.இவருக்கு மூன்று ஆண் 

பிள்ளைகளும் இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர்

நன்றி தினக்குரல்

யாழில் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவஞ்சலி நிகழ்வுகள்

அன்னை துர்க்கா துரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவஞ்சலி நிகழ்வுகள் நேற்று காலை தெல்லிப்பளை துர்க்காபுரத்தில் அமைந்துள்ள துர்க்கையம்மன்
ஆலய தெற்க்கு வீதியில் அமைந்துள்ள யாத்திரிகர் விடுதியில் தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் செஞ்சொற்சேல்வர் ஆறு திருமுருகன் தலைமையில் இடம் பெற்றது.

காலையில் அன்னையின் இறுதிக் கிரியைகள் இடம் பெற்ற தெல்லிப்பளை கட்டுப்பெட்டி மாயானத்தில் நிர்மானிக்கப்பட்ட வைரவர் ஆலயம் திறக்கப்பட்டு பூசை வழிபாடுகள் இடம் பெற்றன. அதனைத் தொடர்ந்து பகல் 9.00 மணிக்கு அன்னையின் பூர்வீக இல்லத்தில் இருந்து திருவுருவப்படம் ஊர்வலமாக யாத்திரிகர் மண்டபத்திற்கு எடுத்துவரப்பட்டது. திருவுருவப் படத்திற்க்கு வீதியின் இருமருங்கிலும் உள்ள வீடுகளின் முன்னர் நிறைகுடங்கள் வைக்கப்பட்டு மலரஞ்சலி இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து யாத்திரிகர் விடுதியில் இடம் பெற்ற அஞ்சலி நிகழ்வில் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ தேசிய ஞானசம்பந்த பாமாச்சாரிய சுவாமிகள் கீரிமலை நகுலேஸ்வர ஆலய பிரதம குரு துர்க்கையம்மன் ஆலய பிரதம குரு அகிலேஸ்வரக் குருக்கள் சர்வதேச இந்துமதக் குரு பீடாதிபதியின் தலைவர் மகேஸ்வரக்குருக்கள், மருதனார்மடம் ஆஞ்ச நேயர் அலுய பிரதம குரு சுந்தரேஸ்வரக்குருக்கள் ஆசியுரை வழங்கினார்கள்.

தலைமையுரையைத் தொடர்ந்து அகில இலங்கை இந்துமாமன்றத்தினால் அன்னையின் ஞாபகார்த்தமாக வெளியிடப்பட்ட இந்து ஒலி நூலை பாரிபாலன சபைத் தலைவர் தவநாதன் வெளியிட்டு வைத்தார். தொடர்ந்து அம்மையாரின் பொன்மொழிகள் அடங்கிய நூலை உப தலைவர் அருளானந்தம் வெளியிட்டு வைத்தார்

மற்றும் அன்னையினால் வளர்க்கப்பட்ட பிள்ளைகளின் அஞ்சலி உரைகளும் கவிதைகளும் இடம் பெற்றதுடன் பிரார்த்தனையும் இடம் பெற்றது. இந் நிகழ்வில் நீதியாளர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆசிரியாகள் அதிபர்கள் மாணவர்கள் அரச ஊழியர்கள் பொது மக்கள் மாணவர்கள் என சுமார் ஜயாயித்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.


தகவல் மற்றும் புகைப்படங்கள் : பதிவு இணையத்தளம்

புதிய மலையகம்

இலங்கைப்பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் பத்திரிகையில் வலைப்பூக்கள் பற்றிய ஆக்கம் வாராவாரம் வெளிவருகிறது.அந்த வகையில் இன்று நிர்ஷன் அவர்களின் புதிய மலையகம் வலைப்பூ வெளிவந்துள்ளது