சில்லையூர் செல்வராசன் (சில்லாலை, யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை , நாடகம், வானொலி நாடகம், மொழிபெயர்ப்பு , விளம்பரம் எனப் பரவலான பங்களிப்புச் செய்தவர். தான் பிறந்த ஊரின் பெயரை முதல் நிலைப்படுத்தி தனது பெயரை சில்லையூர் செல்வராஜன் எனச் சூடிக்கொண்டார். இவரது 12 வது நினைவுதினம் 10. 14. 1995. ஆகும்
மேலும் புகைப்படங்கள் இங்கே -->>
2 comments:
சில்லையூராரின் கவிதைகள் பல மிகவும்காத்திரமானவை. தாந்தோன்றீக்கவிராஜர் என்ற பெயருக்கு மிகவும் பொருத்தமானவர் இவர்தான். இவரின் பல படைப்புகள் இன்னமும் கைஎழுத்துப் பிரதிகளாகவே இருக்கின்றன.
கீழே அவரின் ஒரு கவிதை.
சட்ட விரோதம்.
ஆண்டிடுவோர் செய்கை இது
விந்தை விந்தை
அச்செய்கைத் தன்மையினை
என்னென் போம் நாம்!
மாண்டிடுவார் அனேகர் கத்தி
முனையில் என்று
மழுங்கு முனைச் சிறு கத்தி
யில்லா தொன்றைத்
தீண்டவுமே கூடாதெனச்
சட்டஞ் செய்தார்
தீங்கொழிந்த தென; அந்தோ
சட்டம் மீறி
நீண்டவொரு கத்தி தனை
நிமிர ஏந்தி
நெடுந்தடியில் கொலைச் சிங்கம்
பறக்கலாமோ ?
தான் தோன்றிக்கவிராயர் சில்லையூர் செல்வராஜன் (ஈழம்) 1951ல் சுதந்திரன் பத்திரிகையில் எழுதியது.
குறிப்பு : இலங்கை தேசியக் கொடியில் வாளேந்திய சிங்கம் உண்டு.
வாத்தியதேவன் வருகைக்கு நன்றிகள் கவிதைகள் அருமை . . .
இக்கவிதைகள் உங்களுக்கு பாடமா ?
[அப்புறம் வலைப்பதிவாளர் சந்திப்பு என்னமாதிரி ]
Post a Comment