இலங்கையின் சிறந்த நாடகக்கலைஞர்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள்

இலங்கையில் 1962 ( சமுதாயம்) முதல் 1993 (ஷார்மிளாவின் இதய ராகம் ) வரை ஏறத்தாள 30க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன இப்பதிவில் இலங்கையிலிருந்து வெளிவந்த திரைப்படங்களில் நடித்த நடிகர்களையும் மேடைநாடகங்கள் , நாட்டுக்கூத்துக்கள் முலம் பிரபலமான ஏனைய நாடகக்கலைஞர்களை உள்ளடக்க முனைகிறேன் சில பெயர்கள் விடுபட்டிருக்கலாம் தெரிந்தவர்கள் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தினால் மிகவும் உதவியாயிருக்கும் இவர்களைப்பற்றிய மேலதிக விபரங்கள் இனிவரும் பதிவுகளில் வரும் ( முதலில் தாயகக்கலைஞர்களைத்தொகுத்தபின்னர் தனித்தனியே கலைஞர்களின் விபரங்கள் வரும் ) இது சாதாரண விடையமில்லை போல தெரியவில்லை கம்பர் சொன்னதுபோல் "பாற்கடலை பூனை நக்கிக்குடிக்க ஆரம்பித்தது போல் !!!!!!" இருக்கிறது

இனிவரும் காலங்களில் இவர்களை அகரவரிசைப்படி ஒழுங்குபடுத்தி எழுதமுனைகிறேன்

இலங்கையின் சிறந்த நாடகக்கலைஞர்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள்

1 ] கே.எஸ். பாலச்சந்திரன்
2 ] ஏ. இ. மனோகரன்
3 ] இரா. சிவசோதி வல்வெட்டித்துறை - நாடகக்கலைஞர்
4 ] கலையரசு கே. சொர்ணலிங்கம் - நாடகக்கலைஞர்
5 ] வரணியூரான் எஸ். எஸ். கணேசபிள்ளை - வரணி - நாடகக்கலைஞர்
6 ] மெற்றாஸ் மெயில் - நாடகக்கலைஞர்
7 ] காங்கேசந்துறை வீ.வீ. வைரமுத்து -நாடகக்கலைஞர்
8 ] டிங்கிரி சிவகுரு ஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள்
9 ] சக்கடத்தார் - நகைச்சுவை கலைஞர்
10 ] சில்லையூர் செல்வராஜன்
11 ] கலாநிதி செ. சிவஞானசுந்தரம்(நந்தி)
12 ] வி. பி. கணேசன்
13 ] கே. ஏ. ஜவாஹர்
14 ] விமல் சொக்கநாதன்
15 ] எஸ். ஆர். வேதநாயகம்
16 ] தேவன் அழகக்கோன்
17 ] ராம்தாஸ்
18 ] பொனி ரொபேர்ட்ஸ்
19 ] ஏ.,ரகுநாதன்
20 ] ஆர். அமிர்தவாசகம்
21 ] எஸ். ரி. அரசு
22 ] கே. துரைசிங்கம்
23 ] ஆர். காசிநாதன்
24 ] எஸ். பஸ்தியாம்பிள்ளை
25 ] ஆனந்தன்
26 ] ஜெயகாந்த்
27 ] எம். எஸ். ரத்தினம்
28 ] எம். உதயகுமார்
29 ] சித்திரலேகா மெளனகுரு
30 ] எம். எஸ். பத்மநாதன்
31 ] எம். எம். ஏ. லத்தீப்
32 ] கைலாசபதி
33 ] விஸ்வநாதராஜா
34 ] நவாலியூர் நா. செல்லத்துரை
35 ] கலைச்செல்வன்
36 ] ஹரிதாஸ்
37 ] எஸ். என். தனரட்னம்
38 ] Dr.கே. இந்திரகுமார்
39 ] இராசரட்னம்
40 ] எஸ். ஜேசுரட்னம்
41 ] ஏ. பிரான்சிஸ்
42 ] எஸ். எஸ். கணேசபிள்ளை
43 ] ஸ்டில் வீரமணி
44 ] சிவபாலன்
45 ] நேரு
46 ] சிவபாதவிருதையர்
47 ] சாம்பசிவம்
48 ] சித்தி அமரசிங்கம்
49 ] எஸ். என். தனரட்ணம்
50 ] செல்வம் பெர்னாண்டோ
51 ] தனரட்னம்
52 ] டீன் குமார்
53 ] விஜயராஜா
54 ] எம். ஏகாம்பரம்
55 ] கார்த்திகேசு
56 ] திருச்செந்தூரன்
57 ] ஆர். சிதம்பரம்
58 ] சீதாராமன்
59 ] கந்தையா
60 ] ஸ்ரீதர்
61 ] மோகன்குமார்
62 ] எஸ். விஸ்வநாதராஜா
63] அப்புக்குட்டி இராஜகோபால்
64]ஜேசுரட்ணம்
65] யாழூர் துரை /ஐயாத்துரை என்றும் அழைக்கப்படும் கே.ஏ.தர்மலிங்கம்
66]கே.எம்.வாசகர்
67] நாகேந்திரா

நடிகைகள்
1 ] ஜி. நிர்மலா
2 ] சுபாஷினி
3 ] ருக்மணி தேவி
4 ] சந்திரகலா
5 ] ஜெயதேவி
6 ] சந்திரகலா
7 ] ஆனந்தராணி
8 ] ஜெயதேவி
9 ] ஹெலன்குமாரி
10 ] அனுஷா

11 comments:

said...

வணக்கம் மாயா!
எமது கலைஞர்கள் காலப் பெருவெளியில் மறைந்து போகாமல் இருக்க இத்தகைய பதிவுகள் அவசியம்.
தங்கள் பதிவின் தலைப்பு "இலங்கைக் கலைஞர்களுக்காக" என்றிருப்பதை விட "இலங்கைத் தமிழ் கலைஞர்களுக்காக" அல்லது "ஈழத்துக் கலைஞர்களுக்காக" என்றிருப்பதே பொருத்தமானது என நினைக்கிறேன்.

said...

மாயா!
நீங்கள் முதல் போட்டிருக்க வேண்டிய பெயர் காங்கேசந்துறை வீ.வீ. வைரமுத்து...இந்தியாவில் இருந்து நாடகக் கலைஞர்கள் வருவது குறைந்த பின் தலையெடுத்த கலைஞன். இவர் குழுவில் அனைவருமே சிறந்த கலைஞர்களே!!யாவரும் இவர் உறவினர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

said...

"இலங்கைத் தமிழ் கலைஞர்களுக்காக" அல்லது "ஈழத்துக் கலைஞர்களுக்காக" என்றிருப்பதே பொருத்தமானது என நினைக்கிறேன்

வணக்கம் கோவையூரான் உங்கள் வருகைக்கு நன்றி நீங்கள் பின்னூட்டமிட்ட பின்னர் தான் யோசித்தேன் தவறு விட்டுவிட்டேன் என்று கோவையூரான் உங்கள் எண்ணம் சரியானதே ! வரைவில் பெயர் மாறும்

யோகன்அண்ணா வணக்கம் நீங்கள் கூறிய பெயர்களையும் சேர்க்கிறேன் நன்றி வேறுபெயர்கள் தெரிந்தாலும் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்துங்கள்

நன்றி

said...

மாயா
உண்மையில் நல்ல பதிவு இது.
தணியாத தாகம் - வானொலி நாடகக் கலைஞர்களையும் இங்கு சேர்க்கலாமே!
:-)

said...

வணக்கம் செல்லி
உங்கள் வரவு நல்வரவாகுக

வானொலி நாடகக் கலைஞர்களுக்கென தனியானதொரு பதிவிட எண்ணியுள்ளேன்
வேறுபெயர்கள் தெரிந்தாலும் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்துங்கள்
நன்றி

said...

மாயா,
உங்கள் முயற்சி வரவேற்கப்படவேண்டியதொன்று. இந்த பக்கத்தில் போய்ப்பாருங்கள்.
http://picasaweb.google.com/basu44/1
இதில் வராத கலைஞர்களின் படங்களையும் தொகுத்து உங்கள் பங்களிப்பையும் செய்யலாமே.

said...
This comment has been removed by the author.
said...

நன்றி ஐயா முகவரிக்கு
தொடர்ந்தும் எழுதுவோம்

said...

நல்ல முயற்சி மாயா.
பாரட்டுகளும் நன்றிகளும்
தொடருங்கள்

அன்புடன்
அஜீவன்
www.radio.ajeevan.com

said...

மாயா அவர்களே வந்தனங்கள்!
ஒரு மிகச்சிறந்த ஒரு கலைஞர் உங்கள் தொகுப்பில் இடம்பெறவில்லை. அவர் பெயர் செ.யோகரத்தினம்(துரைமணி) இவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். இவர் அந்தக்காலத்தில் நடித்த வீரபாண்டிய கட்டப்பொம்மன், சோக்கரட்டீஸ், மகனே கண்.. போன்ற நாடகங்கள் மிகவும் பிரபல்யம். இவரை இவ்வூர் மக்கள் கட்டப்பொம்மன் என்றுதான் அழைப்பார்கள். சிவாஜியை பார்த்துவிட்டு நடித்தாலும், சிவாஜியையே விழுங்கிவிடும் அளவிற்கு இவரது நடிப்பு இருந்தது. இவர் மாரடைப்பால் தனது 32வது வயதில் (1972ல்)காலமானார். இவர் அன்று பேசிய வசனங்கள் இன்னமும் என் காதில் ஒலிக்கின்றது. அத்தனை கம்பீரம்!

said...

வணக்கம் ஜயா! உடுப்பிட்டியூர் யோகன் என்ற பெயரையும் சேர்த்துக்கொள்ளுங்குள! இவர் தயாரித்து நடித்த நாடகங்களில் கறை படிந்தகண்ணீர், அணையாத தீபம் போன்றவை மிகவும் பிரபல்யம் ஆனவை, உடுப்பிட்டியூர் வானம்பாடிகள் என்ற பெயரில் வில்லிசையையும் நடத்தி வந்தவர், சிறந்த மேடைப்பாடகரும் கூட, இவரது சொந்தவூர் இலக்கிணாவத்தை என்பதாகும்.