யாழில் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவஞ்சலி நிகழ்வுகள்

அன்னை துர்க்கா துரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவஞ்சலி நிகழ்வுகள் நேற்று காலை தெல்லிப்பளை துர்க்காபுரத்தில் அமைந்துள்ள துர்க்கையம்மன்
ஆலய தெற்க்கு வீதியில் அமைந்துள்ள யாத்திரிகர் விடுதியில் தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் செஞ்சொற்சேல்வர் ஆறு திருமுருகன் தலைமையில் இடம் பெற்றது.

காலையில் அன்னையின் இறுதிக் கிரியைகள் இடம் பெற்ற தெல்லிப்பளை கட்டுப்பெட்டி மாயானத்தில் நிர்மானிக்கப்பட்ட வைரவர் ஆலயம் திறக்கப்பட்டு பூசை வழிபாடுகள் இடம் பெற்றன. அதனைத் தொடர்ந்து பகல் 9.00 மணிக்கு அன்னையின் பூர்வீக இல்லத்தில் இருந்து திருவுருவப்படம் ஊர்வலமாக யாத்திரிகர் மண்டபத்திற்கு எடுத்துவரப்பட்டது. திருவுருவப் படத்திற்க்கு வீதியின் இருமருங்கிலும் உள்ள வீடுகளின் முன்னர் நிறைகுடங்கள் வைக்கப்பட்டு மலரஞ்சலி இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து யாத்திரிகர் விடுதியில் இடம் பெற்ற அஞ்சலி நிகழ்வில் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ தேசிய ஞானசம்பந்த பாமாச்சாரிய சுவாமிகள் கீரிமலை நகுலேஸ்வர ஆலய பிரதம குரு துர்க்கையம்மன் ஆலய பிரதம குரு அகிலேஸ்வரக் குருக்கள் சர்வதேச இந்துமதக் குரு பீடாதிபதியின் தலைவர் மகேஸ்வரக்குருக்கள், மருதனார்மடம் ஆஞ்ச நேயர் அலுய பிரதம குரு சுந்தரேஸ்வரக்குருக்கள் ஆசியுரை வழங்கினார்கள்.

தலைமையுரையைத் தொடர்ந்து அகில இலங்கை இந்துமாமன்றத்தினால் அன்னையின் ஞாபகார்த்தமாக வெளியிடப்பட்ட இந்து ஒலி நூலை பாரிபாலன சபைத் தலைவர் தவநாதன் வெளியிட்டு வைத்தார். தொடர்ந்து அம்மையாரின் பொன்மொழிகள் அடங்கிய நூலை உப தலைவர் அருளானந்தம் வெளியிட்டு வைத்தார்

மற்றும் அன்னையினால் வளர்க்கப்பட்ட பிள்ளைகளின் அஞ்சலி உரைகளும் கவிதைகளும் இடம் பெற்றதுடன் பிரார்த்தனையும் இடம் பெற்றது. இந் நிகழ்வில் நீதியாளர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆசிரியாகள் அதிபர்கள் மாணவர்கள் அரச ஊழியர்கள் பொது மக்கள் மாணவர்கள் என சுமார் ஜயாயித்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.


தகவல் மற்றும் புகைப்படங்கள் : பதிவு இணையத்தளம்