பகீயின் ஊரோடி


இலங்கைப்பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் பத்திரிகையில் வலைப்பூக்கள் பற்றிய ஆக்கம் வாராவாரம் வெளிவருகிறது.அந்த வகையில் இன்று பகீயின் ஊரோடி வலைப்பூ வெளிவந்துள்ளது

சிவத்தமிழ்ச்செல்விக்கு அகவை 83


சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 83வது பிறந்ததின நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றது அதன்போது திரு ஆறுதிருமுருகன் ,யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு சண்முகலிங்கம், வலிகாமம் வலய கல்விப்பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் ஆகியோர் உரையாற்றுவதை படத்தில் காணலாம்.

மேலும் சில தகவல்கள் . .

யாழ் மண்ணின் புனிதத்தை மேம்படுத்தும் புண்ணிய வழியில் தெல்லிப்பழை துர்க்காபுரத்தில் ஒரு சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பெருமை தெய்வத்திருமகள் தங்கம்மா அப்பாக்குட்டியையே சாரும். சொற்பொழிவுப் பணிமூலம் சமய பிரசாரத் தொண்டாகத் தனது சேவை வரலாற்றை ஆரம்பித்த சிவத்தமிழ்ச்செல்வி சிறிய கோயிலாக இருந்த தெல்லிப்பழை துர்க்கை அம்மன் திருத்தலத்தைக் கட்டியெழுப்பி இந்நாட்டில் மட்டுமல்ல பாரெல்லம் வாழும் இந்து மக்கள் போற்றிப் பாராட்டும் வகையில் ஆலயப் பணியுடன் மக்கள் சேவையை ஆற்றி வருகிறார்.
* அமெரிக்கா ஹாவாய் ஷ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆச்சிரமம் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்துப்பணி விருதை அம்மையாருக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
* கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கி தெய்வத் திருமகளைப் போற்றி நின்றது யாழ் பல்கலைக்கழகம்.
* அகில இலங்கை இந்து மாமன்றம் 2005 ஜூலை மாதத்தில் யாழ் மண்ணில் பொன் விழாவையொட்டி இந்து மாநாடு நடத்தியபோது அன்னைக்கு "தெய்வத் திருமகள்" என்ற பட்டம் வழங்கி மாமன்றம் பெருமை தேடிக் கொண்டது

நன்றி :- வீரகேசரி , தினக்குரல்

பத்திரிகையில் ஆரவாரம்

இலங்கைப்பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் பத்திரிகையில் வலைப்பூக்கள் பற்றிய ஆக்கம் வாராவாரம் வெளிவருகிறது.அந்த வகையில் இன்று தாசன் அண்ணாவின் ஆரவாரம் வலைப்பூ வெளிவந்துள்ளது

கானாபிரபாவின் மடத்துவாசல் பிள்ளையாரடி

இலங்கைப்பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் பத்திரிகையில் வலைப்பூக்கள் பற்றிய ஆக்கம் வாராவாரம் வெளிவருகிறது.அந்த வகையில் ஓர் திருப்புமுனையாக தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்று தாயகக்கனவுகளுடன் படைப்புக்களைப்படைத்துவரும் கானாபிரபா அண்ணாவின் மடத்துவாசல் பிள்ளையாரடி வலைப்பூ இன்று பத்திரிகையில் வெளிவந்துள்ளது

[ படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகத்தெரியும் ]