சுவாமி ஞானப்பிரகாசரின் 132 ஆவது பிறந்த தினம்

சுவாமி ஞானப்பிரகாசரின் 132 ஆவது பிறந்த தினம் இன்று வியாழக்கிழமையாகும் . நற்றமிழ் வித்தகர், தமிழ் கூறும் நல்லுலகம் பெற்ற அருந்தவப் புதல்வர், பன்மொழிப் புலவர் சுவாமி ஞானப்பிரகாசரின் 132 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழின் தொன்மையை உலகிற்கு எடுத்தியம்பியவர். வளம் மிக்க ஒரு சந்ததியை உருவாக்கும் விதத்தில் அறிவுபூர்வமான நூல்களை எழுதிய அத்தமிழ் பெரியார் அன்னை தமிழுக்கு செய்த தொண்டு அளப்பரியதாகும்

இவர் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த மன்னர்களுள் ஒருவரான 6 ஆவது பரராஜசேகரனின் பரம்பரையைச் சேர்ந்தவரான இராசலிங்கம் சாமிநாதப் பிள்ளை, தங்கமுத்து தம்பதியினரின் மகனாக 30.08.1875 அன்று பிறந்தார். இவரது இயற்பெயர் வைத்தியலிங்கம்.அச்சுவேலியில் அமைந்திருந்த அமெரிக்க மிஷன் ஆங்கில பாடசாலையொன்றில் ஆரம்ப கல்வியைக் கற்ற அவர்இ யாழ் புனித பத்தரிசியார் கல்லூரியில் கல்வி பயின்றார்.1893 இல் புகையிரதப் பகுதியில் இலிகிதர் பரீட்சையில் முதலாவதாக தேறி கடிகமுகவயிலும் பின்னர் கொழும்பிலும் 3 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 1895 ஆம் ஆண்டு இறைபணிக்கென தம்மை அர்ப்பணித்து யாழ். குரு மடத்தில் சேர்ந்துகொண்டார். 01.12.1901 அன்று குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

இறையர்ப்பணிப்பு சேவையில் முதல் பங்காக ஊர்காவற்றுறையில் பணியாற்றினார். முதன் முறையாக அங்கு நூல் நிலையம் ஒன்றை உருவாக்கி மக்கள் மத்தியில் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தினார். வேதநூல்களை இரவலாகக் கொடுத்து மீண்டும் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை செயல்படுத்தினார். 50 இற்கும் மேற்பட்ட நூல்களை தாமே இயற்றி 30 இக்கும் மேற்பட்ட நூல்களை அச்சேற்றினார். 'ஞான உணர்ச்சி' எனும் நூல் வீரமாமுனிவரால் எழுதப்பட்டதல்ல சாங்கோபாங்க சுவாமிகளே எழுதினார் என இடித்துரைத்தார். நல்லூரில் புனித சவேரியார் ஆலயத்தை கட்டியெழுப்பி பல ஆண்டுகள் பணியாற்றினார். அதனால் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் என அழைக்கப்படலானார்

யாழ்ப்பாண வைபவமாலையில் தாம் கண்ட சரித்திர முரண்பாடுகளை யாழ்ப்பாண வைபவ விமரிசனம் என்னும் நூலில் எடுத்துக் காட்டினார்.புலவர் சுவாமி ஞானப்பிரகாசர் 22.01.1947 ஆம் ஆண்டு தனது 72 ஆம் வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெற்று இறைவனின் திருப்பாதம் சரணடைந்தார். அவரின் தமிழ் தொண்டைப் பாராட்டி தமிழ் நாட்டின் அறிவுக் களஞ்சியங்களாக விளங்கிவரும் ஆதீனங்களில் ஒன்றாகிய திருப்பணந்தாள் மடம்இஅவரை கௌரவித்து சன்மானமும் வழங்கியது. ஜேர்மனி அரசாங்கம் 1939 ஆம் ஆண்டும்இஎமது இலங்கை அரசாங்கம் 22.05.1981 ஆம் ஆண்டும் நினைவு முத்திரைகள் வெளியிட்டு கௌரவித்தன. உலகின் தொன்மைமிகு மொழியான தமிழும் அதன் சொந்தக்காரர்களான தமிழ் மக்கள் வாழும் அளவும் பன்மொழிப் புலவர் சுவாமி ஞானப்பிரகாசரின் நாமம் ஓயாத அலையாக எதிரொலிக்கும்.
நன்றி விக்கிபீடியா

இலங்கையின் சிறந்த நாடகக்கலைஞர்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள்

இலங்கையில் 1962 ( சமுதாயம்) முதல் 1993 (ஷார்மிளாவின் இதய ராகம் ) வரை ஏறத்தாள 30க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன இப்பதிவில் இலங்கையிலிருந்து வெளிவந்த திரைப்படங்களில் நடித்த நடிகர்களையும் மேடைநாடகங்கள் , நாட்டுக்கூத்துக்கள் முலம் பிரபலமான ஏனைய நாடகக்கலைஞர்களை உள்ளடக்க முனைகிறேன் சில பெயர்கள் விடுபட்டிருக்கலாம் தெரிந்தவர்கள் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தினால் மிகவும் உதவியாயிருக்கும் இவர்களைப்பற்றிய மேலதிக விபரங்கள் இனிவரும் பதிவுகளில் வரும் ( முதலில் தாயகக்கலைஞர்களைத்தொகுத்தபின்னர் தனித்தனியே கலைஞர்களின் விபரங்கள் வரும் ) இது சாதாரண விடையமில்லை போல தெரியவில்லை கம்பர் சொன்னதுபோல் "பாற்கடலை பூனை நக்கிக்குடிக்க ஆரம்பித்தது போல் !!!!!!" இருக்கிறது

இனிவரும் காலங்களில் இவர்களை அகரவரிசைப்படி ஒழுங்குபடுத்தி எழுதமுனைகிறேன்

இலங்கையின் சிறந்த நாடகக்கலைஞர்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள்

1 ] கே.எஸ். பாலச்சந்திரன்
2 ] ஏ. இ. மனோகரன்
3 ] இரா. சிவசோதி வல்வெட்டித்துறை - நாடகக்கலைஞர்
4 ] கலையரசு கே. சொர்ணலிங்கம் - நாடகக்கலைஞர்
5 ] வரணியூரான் எஸ். எஸ். கணேசபிள்ளை - வரணி - நாடகக்கலைஞர்
6 ] மெற்றாஸ் மெயில் - நாடகக்கலைஞர்
7 ] காங்கேசந்துறை வீ.வீ. வைரமுத்து -நாடகக்கலைஞர்
8 ] டிங்கிரி சிவகுரு ஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள்
9 ] சக்கடத்தார் - நகைச்சுவை கலைஞர்
10 ] சில்லையூர் செல்வராஜன்
11 ] கலாநிதி செ. சிவஞானசுந்தரம்(நந்தி)
12 ] வி. பி. கணேசன்
13 ] கே. ஏ. ஜவாஹர்
14 ] விமல் சொக்கநாதன்
15 ] எஸ். ஆர். வேதநாயகம்
16 ] தேவன் அழகக்கோன்
17 ] ராம்தாஸ்
18 ] பொனி ரொபேர்ட்ஸ்
19 ] ஏ.,ரகுநாதன்
20 ] ஆர். அமிர்தவாசகம்
21 ] எஸ். ரி. அரசு
22 ] கே. துரைசிங்கம்
23 ] ஆர். காசிநாதன்
24 ] எஸ். பஸ்தியாம்பிள்ளை
25 ] ஆனந்தன்
26 ] ஜெயகாந்த்
27 ] எம். எஸ். ரத்தினம்
28 ] எம். உதயகுமார்
29 ] சித்திரலேகா மெளனகுரு
30 ] எம். எஸ். பத்மநாதன்
31 ] எம். எம். ஏ. லத்தீப்
32 ] கைலாசபதி
33 ] விஸ்வநாதராஜா
34 ] நவாலியூர் நா. செல்லத்துரை
35 ] கலைச்செல்வன்
36 ] ஹரிதாஸ்
37 ] எஸ். என். தனரட்னம்
38 ] Dr.கே. இந்திரகுமார்
39 ] இராசரட்னம்
40 ] எஸ். ஜேசுரட்னம்
41 ] ஏ. பிரான்சிஸ்
42 ] எஸ். எஸ். கணேசபிள்ளை
43 ] ஸ்டில் வீரமணி
44 ] சிவபாலன்
45 ] நேரு
46 ] சிவபாதவிருதையர்
47 ] சாம்பசிவம்
48 ] சித்தி அமரசிங்கம்
49 ] எஸ். என். தனரட்ணம்
50 ] செல்வம் பெர்னாண்டோ
51 ] தனரட்னம்
52 ] டீன் குமார்
53 ] விஜயராஜா
54 ] எம். ஏகாம்பரம்
55 ] கார்த்திகேசு
56 ] திருச்செந்தூரன்
57 ] ஆர். சிதம்பரம்
58 ] சீதாராமன்
59 ] கந்தையா
60 ] ஸ்ரீதர்
61 ] மோகன்குமார்
62 ] எஸ். விஸ்வநாதராஜா
63] அப்புக்குட்டி இராஜகோபால்
64]ஜேசுரட்ணம்
65] யாழூர் துரை /ஐயாத்துரை என்றும் அழைக்கப்படும் கே.ஏ.தர்மலிங்கம்
66]கே.எம்.வாசகர்
67] நாகேந்திரா

நடிகைகள்
1 ] ஜி. நிர்மலா
2 ] சுபாஷினி
3 ] ருக்மணி தேவி
4 ] சந்திரகலா
5 ] ஜெயதேவி
6 ] சந்திரகலா
7 ] ஆனந்தராணி
8 ] ஜெயதேவி
9 ] ஹெலன்குமாரி
10 ] அனுஷா

கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பிறந்த தினம்

"திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்" என்னும் மகாகவி பாரதியின் வாக்கிற்கிணங்க, இந்திய கலாதத்துவத்தை மேல் நாட்டவரும் மதிக்கும் வண்ணம் வெளிப்படுத்திய பெருமைக்குரியவர் கலாயோகி ஆனந்தக் குமாரசுவாமியாவார்.

இவர் இலங்கையின் சிறந்த எழுத்தாளருமாவார்

இவர் 1877ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 22ஆந் திகதி கொழும்பு மாநகரிற் பிறந்தார். தாய்நாட்டின் தன்னிகரற்ற பெருமைகளைப் பிறநாட்டவருக்கு விளங்க வைக்கும் தன்மையானது இவரது பாரம்பரியமான முதுசொத்தாகும். இவரின் தந்தையாராகிய சேர் முத்துக்குமாரசுவாமி அவர்கள்தாம் 'அரிச்சந்திர நாடக'த்தை ஆங்கிலத்தில் எழுதி விக்டோரியா மகாராணிக்குச் சமர்ப்பித்தவர் .

ஆனந்தக் குமாரசுவாமி அவர்களின் தாயார் எலிசபெத் கிளே பீபி என்னும் ஆங்கிலப் பெண்மணியாவார். தந்தையார் 1879 இல் கொழும்பிலே அமரத்துவமெய்தினார். அதன் பின்பு, தாயாரும் தனயனும் இங்கிலாந்திலேயே வசித்து வந்தனர். விக்கிளிவ் கல்லூரியிலும் பின்பு லண்டன் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்ற இவர் 1900ஆம் ஆண்டில் தாவரவியலையும் புவியியலையும் பாடங்களாகக் கொண்டு பீ. எஸ்ஸி. பரீட்சையில் முதலாம் பிரிவிற்றேறினார். 1903இல் முதன் முதலாக இலங்கைக்கு வந்து 1906ஆம் ஆண்டு வரையும் தாதுப் பொருள் ஆராய்ச்சிப் பகுதியின் தலைவராகக் கடமையாற்றினார். இக் காலத்திலேயே 'தோரியனைட்' என்னும் கனியத்தைக் கண்டுபிடித்தார். இதற்காகவே இவருக்கு லண்டன் பல்கலைக்கழகம் கலாநிதிப் (டக்டர்) பட்டம் வழங்குக் கௌரவித்தது. இந்த உத்தியோக தோரணையாக நாட்டின் பலபாகங்களுக்குஞ் செல்லும் பொழுது பாழடைந்து கிடந்த கோயில்களையும், தாதுகோபங்களையும், விகாரைகளையும், அவற்றின் சிற்பத் திறனையும் இவர் ஆராயத் தொடங்கினார். அத்துடன் கிராமப்புறங்களிலிருந்து தொழில் புரிந்து வந்த சிற்போவியப் பரம்பரையினர் சிலரையுஞ் சந்தித்து அவர்களது குருகுலக் கல்வி முறையைப் பற்றியும் ஆராய்ந்துள்ளார். இந்தியக்கலைகளின் தெய்வாம்சத்தினை (இறைமையை, இறைமை மாண்பினை)) உலகிற்கு எடுத்துக் காட்டியசிறந்த தூதுவராகக் கருதப்படுபவர். இறைவனின் ஐந்தொழிலைப் (பஞ்சகிருத்தியத்தைப்) பிரதிபலிக்கும் சிவநடனத்தை விளக்கி 1912 இலே 'சித்தாந்த தீபிகை'யில் எழுதிய ஆங்கிலக் கட்டுரை மூலம் இந்தியக் கலைகளின் சிறப்பினை உலகிற்கு அறிமுகப்படுத்திய முன்னோடியாகக் கொள்ளப்படுகிறார். ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

சகோதரி நிவேதிதையுடன் இணைந்து பௌத்த புராணக்கதைகளையும் தொகுத்துத் தந்துள்ளார். 'பிரபுத்த பாரதா' என்ற சஞ்சிகையில் (இதழில்) 1913, 1914, 1915 ஆம் ஆண்டுகளில் தாயுமானவர் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் சிலவற்றை வழங்கினார்
இவர் கீழைத்தேசக் கலைகளின் மறுமலர்ச்சிக்கு ஆற்றிய பெரும்பணி இந்திய சுதந்திரத்துக்குக் காந்தியடிகள் ஆற்றிய தூய பணியையும், இந்துசமய மறுமலர்ச்சிக்கு சுவாமி விவேகானந்தர் அவர்கள் ஆற்றிய சிறந்த பணியையும் நிகர்த்தவையாகும்.

ஆனந்த குமாரசுவாமி அவர்கள் தமது எழுபதாவது வயதில் செப்டம்பர் 9 1947) இல் அமெரிக்காவில் பொஸ்ரன் (பாஸ்ட்டன்) நகரில் காலமானார்.
விஞானக் கலாநிதியாகவும் தேசியத் தந்தையாகவும் திகழ்ந்து கலைஞானியாகவும் தத்துவஞானியாகவும் மிளிர ஆனந்த (கெண்டிஷ்) குமாரசுவாமி ஒருவரினால்தான் இயலும். இவர் ஈழத்திற்கு மாத்திரமேயன்றி உலகிற்கே ஒரு திலகமாகும்.


வெளிவந்த நூல்கள்
Medieval Sinhalese Art
Arts and Craft of India and Ceylon

Bronzes from Ceylon

Rajput Paintings
The History of Indian and Indonesian Art
The Dance of Siva
Hinduism and Buddhism

Buddha and the Gospel of Buddha
A new Approach to the Vedas
Spiritual Authority and Temporal Power
இலங்கையின் வெண்கல உருவங்கள்
நன்றி : விக்கிபீடியா

இலங்கைக்கலைஞர் வி.பி.கணேசன் ஞாபகார்த்தப்பேரவை

இலங்கையின் தலைசிறந்த மிக முக்கியமான கலைஞர் (நடிகர் , தயாரிப்பாளர் . . . . .)அமரர் கலைஞர் வி,பி,கணேசன் பெயரில் ரேவை ஒன்று அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது அது தொடர்பான புகைப்படங்கள்

1] இதில் வீரகேசரி ஓவியரும் சினிமாப்பகுதி போறுப்பாளருமான ஏ.மொறாயஸ் க்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுவதைக்காணலாம்

2] அடுத்து கலைஇலக்கியப்பணியாற்றிவரும் மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தலைவருமான இரா.அ.இராமனுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுவதைக்காணலாம்
அருகில் திருமதி வி,பி,கணேசன் நிற்பதைக்காணலாம்

ஈழத்துக் கலைஞர்கள் [ பாகம் 1 ]

ஈழத்துக்கவிஞர்கள்

வணக்கம் நண்பர்களே !
இலங்கை வாழ் கலைஞர்கள் மற்றும் மறைந்த கலைஞர்கள் புலம்பெயர்ந்து வாழும் கலைஞர்களின் விபரங்களை என் சக்திக்கு ஏற்றவாறு திரட்டித் தரலாமென்றிருக்கிறேன்

முதலில் ஈழத்துக்கவிஞர்கள் பற்றிய தகவல்களைதருகிறேன் தருகிறேன் இனிவரும்காலங்களில் அவர்களைப்பற்றிய முழு விபரங்களை சேகரித்து தரலாமென்றிருக்கிறேன் நான் சிறியவன் பிழைகள் ஏதுமிருப்பின் பின்னூட்டம் மூலம் தெரிவிக்கலாம் பின்னூட்டங்களே எனக்கு நீங்கள் தரும் உற்சாகம்

மற்றும் ஈழத்துக்கவிஞர்கள் பற்றி அறிந்துள்ள
கானாபிரபா அண்ணா சின்னக்குட்டியார் யோகன் அண்ணா வெற்றி நீங்கள் இதிலுள்ள பிழைகளை நிச்சயம் திருத்துவீர்கள் என நினைக்கிறேன்

1] கல்லடி வேலுப்பிள்ளை
2] வீரமணி ஐயர் - இணுவில்
3] கவிஞர் நீலாவணன் - பெரிய நீலாவணை
4] சு.வில்வரத்தினம் - புங்குடுதீவு
5] காசி ஆனந்தன் (காத்தமுத்து சிவானந்தன்) - மட்டக்களப்பு
6] தாமரைத்தீவான் - திருகோணமலை
7] நாவலியூர் சோமசுந்தர புலவர்
8] மகாகவி உருத்திரமூர்த்தி - அளவையூர்
9] இளவாலை விஜயேந்திரன் - இளவாலை
10] இராமலிங்கம் அம்பிகைபாகர்
11] போராட்டக் கவிஞர் சுபத்திரன் - மட்டக்களப்பு
12 ] சோலைக்கிளி( உதுமாலெவ்வை முகம்மது அதீக் ) - கல்முனை
13] பொன் கணேசமூர்த்தி - யாழ்ப்பாணம்
14] மன்னவன் கந்தப்பு
15] பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை
16 ] சில்லையூர் செல்வராசன்
17] புதுவை இரத்தினதுரை
18] பொன். காந்தன்
19] தமிழ்க்கவி
20] கை.சரவணன்
22] நிலா தமிழின் தாசன்
23] காரை சுந்தரம்பிளை
24] கவிஞர் கந்தவனம்
25] வட்டுக்கோட்டை
26] நல்லதம்பிப் புலவர்
27] அணலை ஆறு
28] இராஜேந்திரம்(கனடா)
29] அம்புலி
30] மலைமகள்
31] அலைமகள்
32] சோழநிலா
33] நிலாந்தன்
34] அமரதாஸ்
35] கருணாகரன்
36] வளவைநாடன்
37] வேலணையூர் சுரேஷ்
38] செங்கதிர்
39] மாமனிதர் நாவண்ணன்
40] பண்டிதர் பரந்தாமன்
41] பண்டிதர் பஞ்சாட்சரம்
42] முல்லை கோணேஸ்
43] முல்லை கமல்
44] சேரன்
45] வ.ஜ.ச ஜெயபாலன்
46] சிவசேகரம்
47] நளாயினி
48] சாருமதி
47] அம்புலி
48] மலைமகள்
49] சஞ்சீவ் காந்த்(இளைஞன்)
50] மேமன்கவி
51] வ.ஐ.ச. ஜெயபாலன்
52]' மலையக பாரதி' சி.வி.வேலுப்பிள்ளை
53] குறிஞ்சித் தென்னவன்
54] அப்துல் அஸீஸ்[அல் அஸுமத்]
55] ஈழவாணன்
56] வி.கந்தவனம்[தற்போது கனடாவில்]
57] நவாலியூர் செல்லத்துரை
58] மாதகல் மயிவாகனப் புலவர்
59] சந்திரபோபோஸ்
யாராவது கவிஞர்களின் பெயர் விடுபட்டிருந்தால் மன்னித்து பின்னூட்டம் மூலம் தெரிவியுங்கள்
இயன்றவரை இந்தப்பயணம் தொடரும்

நன்றி

ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்

இப்பதிவில் இலங்கையிலிருந்து வெளிவந்த திரைப்படங்களையும் சில திரைப்படங்களின் விபரங்களையும் உள்ளடக்க முனைகிறேன் நான் சிறியவன் ? ? சில திரைப்படங்கள் விடுபட்டிருக்கலாம். தெரிந்தவர்கள் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தினால் மிகவும் உதவியாயிருக்கும் நூலகமொன்றில் நேரம்போகாமல் ? ? புத்தகமொன்றைப்புரட்டிக்கொண்டிருந்த போது கண்ணுற்றேன் விடுவேனா ! உடனே எழுதி முடித்துவிட்டேன் எனினும் ஏனைய திரைப்படங்களின் முழுமையான விபரம் கிடைக்கவில்ல

1 )
சமுதாயம் (1962)

2)
தோட்டக்காரி (1963)

3) கடமையின் எல்லை (1966)
இயக்குனர் : எம். வேதநாயகம்
தயாரிப்பாளர் : எம். வேதநாயகம்
கதை : வில்லியம் ஷேக்ஸ்பியர்
திரைக்கதை : வித்துவான் ஆனந்தராயர்
நடிப்பு : தேவன் அழகக்கோன் , எம். உதயகுமார் , பொனி ரொபேர்ட்ஸ் , ஏ.,ரகுநாதன் , ஐராங்கனி , ஜி. நிர்மலா , ஆர். அமிர்தவாசகம் , எஸ். ரி. அரசு , கே. துரைசிங்கம் , ஆர். காசிநாதன் , எஸ். பஸ்தியாம்பிள்ளை

* யாழ்ப்பாண ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆங்கில விரிவுரையாளரான எம். வேதநாயகத்தினால் தயாரிக்கப்பட்டது. இது ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்(Hamlet) என்ற ஆங்கில நாடகத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட சரித்திரப்படம் ஆகும்.

4)
பாச நிலா (1966)

5)
டாக்சி டிறைவர் (1966)

6)
நிர்மலா (1968 )

7)
மஞ்சள் குங்குமம் (1970)

8)
வெண் சங்கு (1970)

9) குத்துவிளக்கு (1972)
இயக்குனர் : மகேந்திரன்
தயாரிப்பாளர் : எஸ். துரைராஜா
நடிப்பு : ஆனந்தன் , ஜெயகாந்த் , லீலா நாராயணன் , பேரம்பலம் , எம். எஸ். ரத்தினம் , எஸ். ராம்தாஸ் , நாகேந்திரா

பெரும்பாலான வெளிப்புறக்காட்சிகள் வடமராட்சியில் பருத்தித்துறையை அண்டிய பகுதிகளில் படமாக்கப்பட்டன. பிரபல கட்டிடக்கலை நிபுணரான வீ. எஸ். துரைராஜா தயாரித்தார்

10)
மீனவப் பெண் (1973)

11)
புதிய காற்று (1975)

12)
கோமாளிகள் (1976)

13) பொன்மணி(1977)
இயக்குனர் : தர்மசேன பத்திராஜா
நடிப்பு : பாலச்சந்திரன் , சுபாஷினி , சித்திரலேகா மெளனகுரு , எம். எஸ். பத்மநாதன் , கலாநிதி செ. சிவஞானசுந்தரம்(நந்தி) , கைலாசப்தி

* சிங்களத் திரைப்பட இயக்குனரான தர்மசேன பத்திராஜாவினால் இயக்கப்பெற்றது.

14) காத்திருப்பேன் உனக்காக (1977)
இயக்குனர் : எஸ். வி. சந்திரன்
தயாரிப்பாளர் : எம். ஜெயராமச்சந்திரன், எம். தீனதயாளன், எம். செல்வராஜ்
கதை : எம். செல்வராஜ்
திரைக்கதை : நவாலியூர் நா. செல்லத்துரை
நடிப்பு : என். சிவராம்,கீதாஞ்சலி , ரவி செல்வராஜ்,விஸ்வநாதராஜா ,நவாலியூர் நா. செல்லத்துரை ,ருக்மணி தேவி,எம். எம். ஏ. லத்தீப் , தர்மலிங்கம்

* சிறந்த நடிப்பு,இனிய பாடல்கள், நல்ல திரைக்கதை என்று இருந்தபோதிலும், நாட்டில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக, எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

15)
நான் உங்கள் தோழன் (1978)
இயக்குனர் : எஸ். வி. சந்திரன்
தயாரிப்பாளர் : வி. பி. கணேசன்
கதை : கலைச்செல்வன்
நடிப்பு : வி. பி. கணேசன் , சுபாஷினி , எஸ். ராம்தாஸ் , எம். எம். ஏ. லத்தீப் , கே. ஏ. ஜவாஹர் , கலைச்செல்வன் , ஹரிதாஸ் , ருக்மணி தேவி , ஜெனிடா , சந்திரகலா , எஸ். என். தனரட்னம் , விமல் சொக்கநாதன் , ஜெயதேவி

1978ம் ஆண்டு இலங்கை திரைப்பட உலகிற்கு ஒரு முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில் மொத்தம் 6 ஈழத்து தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. வி. பி. கணேசன் தனது முதலாவது படமான புதிய காற்றுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து எடுத்த திரைப்படம்.அவரே இந்தமுறையும் பிரதான பாத்திரத்தில் நடித்தார்.

* கொழும்பு, மலையகம் என்பவற்றோடு யாழ்ப்பாணத்து நகர வீதிகளிலும், மட்டக்களப்பு மாமாங்கத் திருவிழாவிலும் கூட படப்ப்டிப்பு நடத்தினார்கள்.

* அக்கால இந்தியப்படங்களில் சிலவேளைகளில் அரசியல் தலைவர்களின் மகாநாடுகள், இறுதி ஊர்வலங்கள் என்பனவற்றை இணத்துக் கொள்வதைப் போல, இத்திரைப்படத்தில் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் இறுதி ஊர்வலம் இணைக்கப்பட்டது.

16) வாடைக்காற்று (1978)
இயக்குனர் : பிரேம்நாத் மொறாயஸ்
தயாரிப்பாளர் : ஏ. சிவதாசன், ஆர். மகேந்திரன், எஸ். குணரட்னம்
கதை : செங்கை ஆழியான்
திரைக்கதை : செம்பியன் செல்வன், கே. எம். வாசகர்
நடிப்பு : ஏ. இ. மனோகரன் , கே. எஸ். பாலச்சந்திரன் , Dr.கே. இந்திரகுமார் , சந்திரகலா , ஆனந்தராணி , இராசரட்னம் , எஸ். ஜேசுரட்னம் , ஏ. பிரான்சிஸ் , கே. ஏ. ஜவாஹர் , எஸ். எஸ். கணேசபிள்ளை , ஜெயதேவி , லடிஸ் வீரமணி , டிங்கிரி கனகரட்னம் , சிவகுரு , சிவபாலன் , நேரு

கமலாலயம் மூவிஸ் தயாரித்த இந்த திரைப்படம் மன்னார் பகுதியில் உள்ள பேசாலையிலும், வட்டுக்கோட்டை, கந்தரோடை, கல்லுண்டாய், வல்லிபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கப்பட்டது. மீனவ சமூகத்தின் வாழ்வினை கூறும் இத்திரைப்படம் 1978 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினைப் பெற்றது.

* பல சிங்களத் திரைப்படங்களை இயக்கிய பிரேம்நாத் மொறாயஸ் இந்த திரைப்படத்தை இயக்கினார். கே. எஸ். பாலச்சந்திரன் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஈழத்து ரத்தினம், சில்லையூர் செல்வராசன் ஆகியோர் இயற்றிய பாடல்களை ஜோசப் ராசேந்திரன், முத்தழகு, சுஜாதா அத்தநாயக்க ஆகியோர் பாடினார்கள். நடன அமைப்பை வேல் ஆனந்தனும், சண்டைப் பயிற்சியை நேருவும் கவனித்துக் கொண்டார்கள்.

* 'வாடைக் காற்று' நாவலின் கதைக்களம் நெடுந்தீவாக இருந்தபோதிலும், போக்குவரத்துச்சிரமங்களின் காரணமாக அதே இயற்கைச்சூழலில், பனங் காணிகள், மட்டக் குதிரை (Ponies), கரை வலை என்பனவுள்ள பேசாலைக் கிராமத்தில் தான் பெரும்பகுதி படமாக்கப்பட்டது.

* இலங்கைத் தமிழ்த் திரைப்படமொன்றின் பாடல்கள் இசைத்தட்டாக முதலிலேயே வெளிவந்தது என்ற பெருமையைப் பெற்றது, 'வாடைக்காற்று' பாடல்கள்தான்.

* வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே என்ற இந்தப் பாடல் வானொலி மூலம் இலங்கை, இந்திய ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

மேலும் விபரங்களுக்கு
கானாபிரபா அண்ணாவின் வாடைக்காற்று பற்றிய பதிவு

17) தென்றலும் புயலும் (1978)
இயக்குனர் : எம். ஏ. கபூர்
தயாரிப்பாளர் : மருத்துவர் எஸ். ஆர். வேதநாயகம்
திரைக்கதை : எஸ். ஆர். வேதநாயகம்
நடிப்பு : சிவபாதவிருதையர் , ஹெலன்குமாரி , சாம்பசிவம் , எஸ். ஆர். வேதநாயகம் , சித்தி அமரசிங்கம் , ஏ. ஜவாஹர் , டீன் குமார் , செல்வம் பெர்னாண்டோ , சந்திரகலா , தனரட்னம

யாழ்ப்பாணத்தில் ஒரேநேரம் "லிடோ" திரையரங்கில் "தென்றலும் புயலும்" திரைப்படமும், "ராணி" திரையரங்கில் "வாடைக்காற்று" திரைப்படமும் காண்பிக்கப்பட்டன. இப்படி இரண்டு ஈழத்து தமிழ்த்திரைப்படங்கள் ஒரு நகரத்தில் சமகாலத்தில் திரையிடப்படுவது மிகவும் அரிதானதென அந்தக்கால இளைஞர்கள் கதைத்தனர்

18)
தெய்வம் தந்த வீடு (1978)

19) ஏமாளிகள் (1978)
இயக்குனர் : எஸ். இராமநாதன்
தயாரிப்பாளர் : ஏ. எல். எம். மவுஜூட்
கதை : கே ஏ எஸ். ராம்தாஸ்
நடிப்பு : என். சிவராம் , ஹெலன்குமாரி , ராஜலட்சுமி , ரி. ராஜகோபால் , எஸ். செல்வசேகரன் , கே. ஏ. ஜவாஹர் , இரா பத்மநாதன்
இசை : கண்ணன் - நேசம்

கோமாளிகள் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து எஸ். ராம்தாஸ் கதை, வசனம் எழுதி வெளியிட்ட இரண்டாவது படம்.

20)
அனுராகம் (1978)
இயக்குனர : யசபாலித்த நாணயக்கார
தயாரிப்பாளர் : யசபாலித்த நாணயக்கார
திரைக்கதை : பி. எஸ். நாகலிங்கம்
நடிப்பு : என். சிவராம் , சந்திரகலா , அனோஜா , எஸ். என். தனரட்னம் , எஸ். விஸ்வநாதராஜா , டொன் பொஸ்கோ , செல்வம் பெர்னாண்டோ

* சமகாலத்தில் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே கதை படமாக்கப்பட்டது .கீதிகா என்ற பெயரில் சிங்களப் படமாக தயாரித்தார்கள்.பிரதான பாத்திரங்களில் சிங்களப் படத்தில் விஜய குமாரணதுங்கவும், மாலினி பொன்சேகாவும் நடித்தார்கள்.

* இத்திரைப்படத்தை தயாரித்து இயக்கிய யசபாலித்த நாணயக்கார என்பவரே இதே போல இரண்டு மொழிகளிலும் படமாகிய நாடு போற்ற வாழ்க திரைப்படத்தையும் இயக்கியவர். இவர் இடதுசாரி அரசியல்வாதியான வாசுதேவ நாணயக்காரவின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.

21)
எங்களில் ஒருவன் (1979)

22)
மாமியார் வீடு (1979)

23 )
நெஞ்சுக்கு நீதி (1980)

24)
இரத்தத்தின் இரத்தமே (1980)

25) அவள் ஒரு ஜீவநதி (1980 )
இயக்குனர் :ஜே. பி. ரொபேர்ட், ஜோ மைக்கல்
கதை :மாத்தளை கார்த்திகேசு
நடிப்பு : கே. எஸ். பாலச்சந்திரன் , டீன் குமார் , விஜயராஜா , எம். ஏகாம்பரம் , கார்த்திகேசு , திருச்செந்தூரன் , அனுஷா , ஆர். சிதம்பரம் , சீதாராமன் , , கந்தையா , ஸ்ரீதர் , மோகன்குமார் , சந்திரகலாஈழத்து ரத்தினம், சி. மெளனகுரு, கார்த்திகேசு ஆகியோர் இயற்றிய பாடல்களுக்கு, இசை அமைப்பாளர் எம். எஸ். செல்வராஜா இசை அமைக்க, வி. முத்தழகு, கலாவதி, எஸ். வி. ஆர். கணபதிப்பிள்ளை, சுஜாதா அத்தனாயக்க, ஜோசப் ராஜேந்திரன் ஆகியோர் பாடினார்கள்.

26) நாடு போற்ற வாழ்க (1981)
இயக்குனர் : யசபாலித்த நாணயக்கார
கதை : எஸ். என். தனரட்ணம்
நடிப்பு : வி. பி, கணேசன் , கே. எஸ். பாலச்சந்திரன் , கீதா குமாரதுங்க , ஸ்வர்ணா மல்லவராச்சி , எஸ். ராம்தாஸ் , ஏ. லத்தீப் , எம். ஏகாம்பரம் , உபாலி செல்வசேகரன் , டொன் பொஸ்கோ , மணிமேகலை , புஸ்பா , ரஞ்சனி

* இலங்கையின் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான வி. பி. கணேசன் தயாரித்த மூன்றாவது திரைப்படம் இது. மலையகத்தில் தியத்தலாவை, பண்டாரவளை, ஹப்புத்தளை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது.

* ஒரே நேரத்தில் இந்தக்கதை 'அஞ்சானா' என்ற பெயரில் சிங்களப் படமாகவும் எடுக்கப்பட்டது. இதில் பிரபல நடிகர்களான விஜய குமாரதுங்க ரொபின் பெர்னாண்டோ இருவரும் முக்கிய பாத்திரங்களில் ந்டித்தார்கள்.

27)
பாதை மாறிய பருவங்கள் (1982)

28) ஷார்மிளாவின் இதய ராகம் (1993)
இயக்குனர் : சுனில் சோம பீரிஸ்
தயாரிப்பாளர் : பேராதனை ஜுனைதீன், ஜெக்கியா ஜுனைதீன்
கதை : ஜெக்கியா ஜுனைதீன்
திரைக்கதை : பேராதனை ஜுனைதீன்
நடிப்பு : சசி விஜேந்திரா , வீணா ஜெயக்கொடி , கே. ஏ. ஜவாஹர் , எஸ். ராம்தாஸ் , கே. எஸ். பாலச்சந்திரன் , எம். எம். ஏ. லத்தீப் , ஜோபு நசீர் , எஸ். விஸ்வநாதராஜா , எஸ். என். தனரட்ணம், கமலஸ்ரீ , ராஜம் , திவானி , ஜெயப்பிரியா , பாத்திமா , சுஸ்பிகா

* இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது தமிழ் வர்ணத்திரைப்படம்.
* 1989ல் த்யாரித்து முடிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 4 வருடங்கள் கழிந்தபின்னரே 1993ல் திரைக்கு வந்தது.

* இத்திரைப்படம் "ஒப மட்ட வாசனா" என்ற தலைப்பில் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

இப்போது தமிழ்ப்படங்கள் முற்றிலுமாக வெளிவருவது இல்லை காரணம் அயல்மொழி திரைப்படங்களின் காரணமாயிருக்குமா ?

ஈழத்துக்கலைஞர்கள் வலைப்பூ அறிமுகம்

வணக்கம் நண்பர்களே !
இலங்கை வாழ் கலைஞர்கள் மற்றும் மறைந்த கலைஞர்கள் புலம்பெயர்ந்து வாழும் கலைஞர்களின் விபரங்களை என் சக்திக்கு ஏற்றவாறு திரட்டித் தரலாமென்றிருக்கிறேன். இனிவரும்காலங்களில் தாயகத்தில் இருந்து வெளியான திரைப்படங்கள் பற்றிய விபரங்கள் மற்றும் தாயகத்தில் கலைகளுக்காக நடைபெறும் நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள் ஆகியவற்றைப்பற்றிய முழு விபரங்களை சேகரித்து தரலாமென்றிருக்கிறேன். இது தனித்து நின்று செயற்படுத்த முடியாத வேலை அதனால் நண்பர் ஒருவரையும் இணைத்து செய்யலாமென்றிருக்கிறேன்
நாம் சிறியவர்கள் கலைஞர்களின் வரலாறுகள் அறிந்தவர்கள் பலர் இருப்பார்கள் அவர்கள் பிழைகள் ஏதுமிருப்பின் பின்னூட்டம் மூலம் தெரிவிக்கலாம் பின்னூட்டங்களே எனக்கு நீங்கள் தரும் உற்சாகம்
இயன்றவரை இந்தப்பயணம் தொடரும்
நன்றி