இலங்கைப்பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் பத்திரிகையில் வலைப்பூக்கள் பற்றிய ஆக்கம் வாராவாரம் வெளிவருகிறது.அந்த வகையில் இன்று வந்தியதேவனின் உளறல்கள் வெளிவந்துள்ளது . இனிமேல் பத்திரிகையில் வலைப்பதிவர்கள் பற்றி வெளிவரும் ஆக்கங்கள் யாவும் கலைஞர்கள் தளத்தில் இடம்பிடிக்கும் ஏனென்றால் ஆக்கங்களைப்படைப்பதால் வலைப்பதிவர்களும் கலைஞர்கள் தானே ?
யாழ் நகர வீதியில் நாம் சுற்றித் திரிந்த காலங்கள்
இலங்கைக்கலைஞர் மதியின் கைவண்ணத்தில் வந்த "யாழ் நகர வீதியில் நாம் சுற்றித் திரிந்த காலங்கள்" என்ற பாடலின் பாடல்வரிகளை இன்று உங்களுடன் பகிர்கிறேன் இசைத் துறையில் வி.கே.ஜே.மதியின் புகழ் எங்கும் பரவவேண்டும் என்று இவ்வேளை இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
பாடலைக்கேட்டுக்கொண்டே மீதியைப்படியுங்கள்
|
யாழ் நகரவீதியில் நாம் சுற்றித்திரிந்த காலங்கள்
வல்லைவெளி நாம் சென்று காற்று வாங்கிய நேரங்கள்
நல்லூர்க்கந்தன் வீதியில் நாம் கம்பன்கழகம் பார்த்ததும்
ராஜாத்தியட்டர் அரங்கிலே களவாய் சினிமா பார்த்ததும்
லேடிஸ் கோலிஜ் சுண்டிக்குளி வேம்படி வீதியெல்லாம்
சைக்கிளில் சுற்றியது என்நெஞ்சில் சுற்றுதடா (2)
சட்டநாதர் கோயிலில் அருணா கோஷ்டி பார்ப்பதும்
இளங்கலைஞர் மன்றத்தில் அரங்கேற்றம் பார்த்ததும்
சின்னமணி வில்லிசை சின்னவயசில் பார்த்ததும்
மாவிட்டபுரம் கோயிலில் மாவிளக்கு போட்டதும்
கீரிமலைக்கடலிலே நீச்சல் பழகப்போனதும்
கச்சான் கடை ஆச்சியோடு சண்டைபிடித்து ஓடியதும் (2)
தட்டிவானில் ஏறி சந்நிதி கோயில் போனதும்
அன்னதான மண்டபத்தில் வரிசையாக நின்றதும்
பன்றித்தலைச்சி அம்மன் கேயில் பங்குனித்திங்கள் பொங்கலும்
வல்லிபுரக்கோயிலின் நாமம் அள்ளிப்பூசியதும்
நாகர்கோவில் மண்ல்காடு சவுக்கங்காட்டுத்தோப்பெல்லாம்
கப்பல் திருவிழா பார்த்தது என் நெஞ்சில் நிக்குதடா (2)
துர்க்கைஅம்மன் கோயிலில் பிரதட்டை அடித்ததும்
மாரிஅம்மன் கோயிலில் தீவெட்டி பிடித்தததும்
சுட்டிபுரம் அம்மன் கோயில் சீர்காழி கச்சேரியும்
நயினை அம்மன் கோயிலுக்கு வள்ளத்தில் போனதும்
விக்னா டியூஷன் போனதும் Science Hall இல் படித்ததும்
நேற்றுப்போல தெரியுது இது வாழ்வில் மறக்குமா (2)
பள்ளிக்கூடம் போகாமல் Big Match பார்க்கப்போனதும்
வாத்தியாரைக்கண்டதும் கூட்டத்திலே மறைந்ததும் (2)
யாழ்நகரவீதியில் நாம் சுற்றித்திரிந்த காலங்கள்
வல்லைவெளி நாம் சென்று காற்று வாங்கிய நேரங்கள்
நல்லூர்க்கந்தன் வீதியில் நாம் கம்பன்கழகம் பார்த்ததும்
கைலாசபதி கலையரங்கில Colors Night பார்த்ததும்
லேடிஸ் கோலிஜ் சுண்டிக்குளி வேம்படி வீதியெல்லாம்
சைக்கிளிலே சுற்றியது என்நெஞ்சில் சுற்றுதடா (2)
யாழ்நகரவீதியில் நாம் சுற்றித்திரிந்த காலங்கள்
வல்லைவெளி நாம் சென்று . . . . . .
காற்று வாங்கிய நேரங்கள் . . . . . .
இந்தப்பாடலை புலம்பெயர்தமிழர்கள் அனைவரையும் சென்றடையவேண்டுமென்பதே எனது நோக்கம் எனவே இப்பாடலைக்கேட்கும் நீங்கள் உங்கள் நண்பருக்கோ உறவினருக்கோ தெரிவியுங்கள்
நன்றி
பாடலைப்பெற உதவிய நண்பர் ஜேயாவுக்கும் நன்றிகள்
Posted by மாயா at 10 comments
Labels: ஈழத்துக்கலைஞர்கள்
Subscribe to:
Posts (Atom)